ஈழமும் இந்திய அரசியலும்

செப் 19, ராமேஸ்வரத்தில் சினிமா துறையினர் சார்பில் இல்அங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து பேரணி நடைபெற்றது. இதில் கவனிக்க தக்கவை...
1. பேரணி மேடையை பார்த்த பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்க கூட்டம் போன்ற தோற்றம், படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டும் ஏன் யாரும் வரவில்லை. தொழில் முறையில் போட்டிகள் இருந்தாலும் மனிதநேயத்தோடு பங்கு கொள்ளலாமே.
2. மேடையில் பேசியவர்களில் பெரும்பாலும் இரண்டு விஷயங்களை சுட்டிகாட்ட தவறவில்லை. ஒன்று இதில் பங்கேற்காதவர்களை பற்றி தமிழ் துரோகிகள் என அறிவித்தல். இரண்டு பிரபாகரானை வீரனாக போற்றுதல்.
3. சேரன் அவர்களின் பேச்சில் மட்டும் ஒரு ஆதங்கம், காவிரி பிரச்சனைக்கு நெய்வேலி சென்றோம், ஒகேனக்கல் பிரச்சனைக்கு போராடினோம், இன்று ராமேஸ்வரம் வந்திருக்கிறோம் இதை இன்றோடு மறந்து நட்சத்திரங்களை பார்த்து ரசித்ததோடு செல்லாமல், இந்த பிரச்சனையை இந்திய அரசு தீர்க்கும் வரை தேர்தலை புறக்கணிக்கலாம் என்றார். இது சாத்தியமா? சாதியமாகினால் மீன் பிடிக்க செல்லும் இந்தியர்கள் கருவாடாய் திரும்புவதை தவிர்க்கலாம்.
4. வைகை புயல் வீசிய பொழுது இலங்கை தமிழர்களின் ஆதரவு குரலுக்கு இணையாக, மீண்டும் கல்வீச்சு நடக்குமோ என்ற கவலயும் இருந்தது.
5. தமிழ் திரை உலகின் நடிகன் என்ற முறையில் கலந்துகொண்ட ஜீவா தமிழ்நாட்டவர் அல்ல என சுட்டப்பட்டார்.
மொத்தத்தில் இந்த மேடை ராஜபக்ஷே என்னும் ஒருவரை தூற்றி பிரபாகரனை புகழ்ந்து, தனித் தமிழ்நாடு தேவையோ என்னும் என்னத்தை ஏற்படுத்த முயற்சித்ததே அன்றி வேறொன்றும் இல்லை.
ஆனால் இதில் சீமானின் ஒரு கேள்விக்கு மத்திய அரசு பதில் தருமா?
அவரது கேள்வி, ரசாயன ஆயுதம் இருக்கலாம் என்பதற்காக ஈராக்கை அமெரிக்கா போர் புரியலாம் என்றால், இந்திய மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடல் படையை இந்திய அரசு ஏன் எதிர்கவில்லை?

ஒன்று மட்டும் நிச்சயம் இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பும், தேவைபட்டால் இந்திய இலங்கை கடல் படைகளின் கூட்டு முயற்சிகளும் தேவை. சாகுபடியின் பொழுது மட்டும் பேசப்படும் காவேரி பிரச்சனை போல் இல்லாமல், இலங்கை அரசை கண்டித்து அறிக்கைகளும், கழகங்களுக்கு ஒன்றாக கண்டன கூட்டங்களும், இரங்கல் கவிதைகளும் என்று நிற்காது.. இதுவரை இதை அரசியல் ஆதாயங்களுக்கு பயன் படுத்தியது போதும் என்று மாநில அரசும், பிற கட்சிகளும் உருப்படியாக செயல்பட வேண்டும்.

0 comments: