மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ்

கடந்த செவ்வாய் என் திருவாய் கண்டதையும் தின்ற பலனாய் தூக்கம் வரலை. பெட்ரூம்ல என் ரூம்மெட்(நான் என்-திராயன் எழுத காரணமானவன் ) 'அழகன்' படத்தில் வரும் 'என் வீட்டில்....' பாட்டு ரேஞ்சுக்கு மொபைல்ல பேசிக்கிட்டிருந்தான். 12மணி தாண்டியும் அவன் ஓயாததால அவன் கிட்ட இருந்து தப்பிக்க எஃப்.எம் கேக்க ஆரம்பிச்சேன்.
அப்ப செம சூடான ஒரு எஃப்.எம்ல லவ் டாக்டர் ஒருத்தரு பேசிக்கிடிருந்தாங்க... அவங்க இன்னிக்கு நம்ம கிட்ட மிஸ்.எக்ஸ் பேசவந்திருக்காங்க, அவங்க கிட்ட பேசுரதுக்கு முன்னாடி ஒரு பாட்டு கேளுங்கனு ரெண்டு பாட்டு போட்டாங்க. சரி ரொம்ப நல்ல்வங்களா இருகங்களேனு நானும் பாட்டு முடிஞ்சு நிகழ்ச்சிய தொடருந்து கேட்டேன்.

அந்த மிஸ்.எக்ஸ் அவங்கள பத்தி ஒரு சிறுகுறிப்பு(சுமார் 3நிமிஷம்)சொன்னாங்க. உடனே நம்ம லவ் டாக்டரு யாருக்கெல்லாம் மிஸ்.எக்ஸ புடிசிருக்கோ உடனே உங்க மொபைல எடுத்து ஒரு 5டிஜிட்(இப்ப எல்லாம் டிவி, ரேடியோ இதுக்கெல்லாம் விளம்பரத்தை விட இந்த எஸ்.எம்.எஸ் தான் அதிக வருமானம் தருதோ?) எண்ணுக்கு மெசேஜ் அனுப்புங்க, பிறகு நீங்க மிஸ்.எக்ஸோட பிரெண்டு புடிசிக்கலாம் அப்படினாங்க. 'ஆகா இது.. அது இல்ல..' அப்படினு நான் கொஞ்சம் ஷாக்காகி முடிக்கிறதுக்குள்ள இன்னும் ரெண்டு பாட்டு ஓவர். அப்பறமா கொஞ்சம் கொஞ்சம் பாட்டுக்கு நடுவுல மிஸ்.எக்ஸ் அவங்களோட கனவு கண்ணன் பத்தி சொன்னாங்க. அது என் கிரெடிட் கார்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ விட பயங்கரமா இருந்துது.
இவங்க சொல்லி முடிச்சதும் லவ் டாக்டரு ஒரு அருமையான கருத்து சொன்னாங்க மிஸ்.எக்ஸ் ஒரு கிளாசிக்கல் டான்சர் அதனால மிஸ்டர்.எக்ஸ் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாம். அப்படி பார்த்தா பத்மா சுப்ரமனியம் மாதிரி டான்சர் பின்னாடி ஒரு எக்ஸ் கூட்டமே அலையனும். அடப்பாவிகளா கலைய கொலை ஆக்கிட்டீங்களே!!
மணி 12.45 ஆச்சு.. நம்ம லவ் டாக்டரு மிஸ்.எக்ஸ்க்கு வாழ்த்தெல்லாம் சொல்லி முடிச்சாங்க. சரி இதோட இந்த காமெடி டைம் முடிஞ்சுதுனு நினைச்சேன். ஆனா அப்பதான் அந்த பயங்கரம்... லவ் டாக்டரு சொன்னாங்க "வாங்க நம்ம போன வாரம் பேசின மிஸ்டர்.எக்ஸ்கு கனவு கன்னி கிடைச்சாங்க்களானு பார்ப்போம்னு" சொல்லி 3 விளம்பரத்தை ஓட்டி விட்டாங்க. பின்னர் ஒருத்தருக்கு போன் பண்ணினா, அந்த் பக்கம் ஒரு மிஸ்டர்.எக்ஸ் தூக்க கலக்கத்துல "எனக்கு இன்னும் கனவு கன்னி கிடைக்கல.. நான் சொன்னேன்ல எனக்கு கிடைகாதுனு.." இப்படி சொன்னதையே சொல்லிட்டிருந்தாரா... நம்ம லவ் டாக்டரு உடனே "இல்ல எக்ஸ் நீங்க ரொம்ப லக்கி உங்களுக்காக ஒரு மிஸ் காத்துகிடிருக்காங்க. அவங்க கிட்ட பேசுங்க" அப்படினு ஒரு மிஸ்.எக்ஸ்கு போன் பண்ணினாங்க. அப்ப ஒரு மிஸ்.எக்ஸ் எக்கச்ச்க்க வெக்கத்தோட மிஸ்டர்.எக்ஸ் கிட்ட பேசினாங்க. மிஸ்டர் எக்ஸ ஏன் புடிக்கும்னு அபத்தமா(தெய்வீகமா?) ஒரு காரணத்தையும் சொன்னாங்க. அதுல நம்ம மிஸ்டர்.எக்ஸ் அப்படியே கரைஞ்சுபோய்டாரு. கடைசியா லவ் டாக்டரு மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸோட பேர சொல்லி, அவங்க உறவு பலமா இருக்க வாழ்த, மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ் சிரிக்க, இப்படியும் ஒரு நிகழ்சிய தூங்காம கேட்ட என்ன நினைச்சு நானே சிரிப்பா சிரிக்க நிகழ்சி முடிஞ்சிது.
இப்படியே போனா லெட்டர் காதல், போன் காதல், பாத்து காதல், பாக்காத காதல், இண்டெர்னெட் காதல் இந்த வரிசையில் ரேடியோ காதலை வைத்து ஒரு தமிழ் சினிமாவும், சில கொலை, தற்கொலைகளை செய்தியாவும் பாக்கலாம்.
பி.கு: இன்னும் எஸ்.எஸ் இன் போன் கால் முடியவில்லை.... (அவன் ஒரு தொடர்கதை!!!)

0 comments: