என்-திராயன்

சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இன்று, சென்னையின் மழைக்காலத்தில் ஒரு காலை பொழுதின் வெற்றிகரமான என் ஆபிஸ் பயணம் இது.
என்றும் இல்லா திருநாளாக இன்று ஆபிஸ்-க்கு சரியான நேரத்தில் செல்ல நேற்றிரவே முடிவு செய்தேன்(இதற்கு என்னுடன் குடித்தனம் நடத்தும் நண்பனின் தொல்லையும் ஒரு காரனம்)

(படிப்பவர் மன்னிக்க - இன்று முதல் பதிவுகளிள் செந்த்தமிழுடன் சென்னைத்தமிழும் கமழும்)
இதுக்காக, அதிகாலை 8மணிக்கே அலாரம் வைத்தது போல் எழுப்பியும்விட்டான் அந்த நல்லவன். மழையை கர்ரணம் சொல்லி லேட் ஆக்கலாம் என்றால் எனக்காகவே நின்றது போல் 9மணிக்கு மழை நின்றது. இதற்ககுள் என் நண்பன் பொருமை அதிகமாகி எனக்கு அன்பாக வலியுறுத்த வேற வழி இல்லாம வீட்டிலிருந்து கிளம்பி 9.30மணிக்கு பஸ் ஏறியாச்சு. கூட்டத்தில் போராடி புட்போர்ட்ல எடம் பிடிச்சு, ஒரு கைபுடில தொங்கி போராடி டிக்கெட் எடுத்து முடிக்கரதுகுள்ள 20நிமிஷம் போச்சு. பின் 3நிமிஷமா பஸ் ட்ராப்பிக்ல நகராத்தால புட்போர்டுல ஏன் தொங்கணும்னு கிழ குதிச்சா ஒரு இன்ப அதிர்ச்சி. நான் எங்க பஸ்ல ஏரினேனோ அதிலிருந்து நான் 5ஆம் வகுப்பில் லெமன் அண்டு ஸ்பூனு போட்டில ஒடி ஜெயிச்ச 50மீட்டர கூட பஸ் இப்ப தாண்டல.
மழைச்சாரல், வாகனங்கள் வாரி தெளிக்கும் தண்ணீர்னு எவ்வளவு கஷ்டமிருந்தாலும் பஸ்ஸின் பாதி கூட்டம் புட்போர்டில் தான்.(இதுக்கு பேசாம பஸ் முழுக்க புட்போர்டா இருந்தா கொஞ்சம் கூட்டநெரிசல குறைக்கலாமே) அவங்களை எல்லாம் தாண்டி பஸ்ல ஏரின 30ஆவது நிமிடம் டிரைவர்க்கு பின்னாடி இடம் புடிச்சு வாழ் நாள் சாதனை பண்ணியாச்சு. அப்படி என்னதான் காரணம் டிராபிக் ஜாம்க்கு நமக்கு ஏதாவது தெரியுதானு, டிரைவர் கண்ணாடில பாத்தேன் ஒன்னும் தெரியல. ஆனா இப்படி டிரைவர் சீட்க்கு பக்கத்துல நின்னதுக்கு பலன் கொஞ்ச நேரத்துல தெரிய ஆரம்பிச்சுது. அது என்னனா, ஒவ்வொரு பிரேக்குக்ம் மொத்த கூட்டமும் முன்னாடி இருக்கரவங்க மேல சாய்ந்து, எல்லாரும் என் மேல சாய்ந்து மொத்த பஸ்ஸும் என் முதுகில் நிற்பது போன்ற பிரமை ஏற்ப்பட்டது. இதற்கு நடுவே என் அருகில் இருந்த இருவர் தங்கள் வட்ட கௌன்சிலரின் ஊழல் பற்றி பேச ஆரம்பித்தனர். அவர்கள் இந்திய அரசியலை அலசியபோது பஸ் மீனாட்சி கல்லூரியை அடைந்தது. பின்னர் டிராபிக் ஜாமின் கிளைமாக்ஸ் காட்சியாக வள்ளுவர் கோட்டம் தாண்டி காலேஜ் ரோடு வந்தபோது அருகில் இருந்தவர் கடிகாரத்தில் நேரம் 11.15 என பயம்காட்டியது.

பின்னர் இலையுதிர்கால மரம் போல கூட்டதை எல்லாம் காலேஜ் ரோட்டில் உதிர்த்துவிட்ட பின் பஸ்ஸும், நானும் கொஞ்சம் காற்று வாங்கினோம். பின் வரும் ஒரு பஸ் ஸ்டாப்பில் நமது இரட்டையர் ஒபாமா வெற்றி பெருவாரா இல்லையா என்பதை கடைசி வரை சொல்லாமலே இரங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் 5கீமி கடந்து எனது 2 மணி நேர பயணம் முடிவிற்கு வர, காலையில் என்னை ஆபீஸிற்கு அனுப்பிய ஆருயிர் நண்பனை வாழ்த்திகொண்டே இறங்கியதும் எனக்காகவே காத்திருந்தது போல் மழை கொட்ட தொடங்கியது. மழை தூரலாக மாரிய நேரம் ஃப்ளை ஓவரிலிருந்து கொட்டும் மழையருவி, ஹோலி பண்டிகையின் விட்டகுறை தொட்டகுறையாக வண்ணத்தை வாரி இரைக்கும் வாகனங்கள் இதை எல்லாம் தாண்டி, நீந்தி ஆபீஸை அடைந்தபோது மணி 12.30(வழக்கதை விட ஒரு மணி தாமதம்).
இதே போன்ற பிரம்மப்பிரயத்தனம் மாலை தேவைப்படும் என்பதால் இன்று வழகத்தை விட ஒரு மணி முன்னாடி எஸ்கேப் ஆக முடிவு செய்து நானும் என் மலைகோட்டை நண்பனும் கிளம்புவதற்காக இந்த அனு(பா)பவத்தை முடிதுக்கொள்வோமாக.
குறிப்பு: அப்படியே மாலை சென்றாலும் எனக்கு 50காசு சில்லரை தரவேண்டிய கண்டக்டர், ஒபாமாவின் முடிவை சொல்லவேண்டிய இரட்டையர், காலேஜ் ரோட்டில் காலையில் வந்த பஸ் உதிர்ந்த மலர்கள் இவர்களை சந்திக்க முடியுமா???

0 comments: