டாக்டர் எத்தனை டாக்டரடி

ஹிதேந்திரன் - இந்த பெயரை தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தால் மூளை சாவை சாந்தித்த 16வயது ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களை அவனது பெற்றோர்(அசோகன், புஷ்பாஞ்சலி - இருவரும் மருத்துவர்கள்) தானம் செய்தனர். இதை தொடருந்து ஏற்பட்ட விழிப்புணர்வால் உடல் உறுப்புக்களை தானம் செய்வது பெருகிவருகிறது. இதற்கு அரசும் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முயற்சிகளை செய்துவருகிறது.
இதை நான் இங்கு குறிப்பிட காரணங்கள் சில.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருதை என்னும் தச்சு தொழிலாளியின் மனைவி சாந்தி என்பவர் மூளைச்சாவை சந்தித்தார், இதை தொடருந்து அவரது 14 வயது மகன் சுரேஷின் தூண்டுதலில் சாந்தியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன(அல்லது வழங்கப்படவுள்ளன). இதன் தொடர்ச்சியாக என் நினைவுக்கு வரும் இரு வேறு சம்பவங்கள்... சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜாராம்-கவிதா தம்பதியர் தமது 5வயது மகன் நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் எனக்கு மாற்று கருத்துகள் உண்டு. நவீனுக்கு முளை செயல்திறன் குறைவே அன்றி மூளைச்சாவு ஏற்படவில்லை. பொருளாதார பிரச்சனைகளுக்கு உறுப்பு தானம் தீர்வாகதே!!. இதை தவிர்த்து நவீனை அரசு அல்லது தனியார் காப்பகங்கள் வளர்க்கலாமே!!!
/// கின்னஸ்(??) திலீபன் பெற்றோருடன்///


/// நவீன் தாய் கவிதாவுடன்////


சம்பவம் இரண்டு...
சென்ற ஆண்டு ஜூன் மாதம் மணப்பாறையை சேர்ந்த டாக்டர் தம்பதி முருகேசன் காந்திமதியின் தவப்புதல்வன் திலீப் என்னும் 15வயது சிறுவன் கின்னஸ் சாதனைக்காக சிஸேரியன் ஆப்பரேஷன் செய்து சர்ச்சைக்குள்ளானது நினைவிறுக்கிறதா??. இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ, சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம். இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை(???) சமீபத்தில் தொடர ஆரம்பித்தனர். இதனால் எத்தனை உயிர்கள் ஊசலாட உள்ளதோ??

கவனிக்க: ஹிதேந்திரன், திலீபன் இருவரின் பெற்றோரும் மருத்துவர்களே!!!

கொசுறு:
இதை பதிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மற்றோரு மருத்துவர் 24 மணி நேரத்தில் 50 ஹிரண்யா ஆப்பரேஷன் செய்ய முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன்..
ஐயா உங்கள் சாதனை சோதனைகளுக்கான விலை மற்றவர் உயிர் அல்ல!!

2 comments:

நட்புடன் ஜமால் 25 November 2008 at 1:49 pm  

\\கொசுறு:
இதை பதிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மற்றோரு மருத்துவர் 24 மணி நேரத்தில் 50 ஹிரண்யா ஆப்பரேஷன் செய்ய முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன்..
ஐயா உங்கள் சாதனை சோதனைகளுக்கான விலை மற்றவர் உயிர் அல்ல!!\\

இது கொசுறு அல்ல

Anonymous 26 November 2008 at 1:48 pm  

டாக்டர் கிட்ட போகவே பயமா இருக்கு