என்(ன) அவசரம்

நான் வணக்கத்துடன் சொன்னது போல காவிரி பாயும்/பாய்ந்த(இப்பயுமா பாயுது??) கோவில் நகரத்து மகாமக குளக்கரையில ஒரு தனியார் ஆஸ்பத்திரில தான் இவன் ஜனனம். என்னோட அப்பா அம்மாவின் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் விஷயங்கள் எல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சதால் அதுல என் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடவேண்டாம்.. தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்துல மாப்பிளையின் அக்கா மகளை என் அப்பாவுக்கு புடிச்சுபோக நல்லபடியா பெண் கொடுத்து பெண் எடுத்து முடிந்தது. இப்படியாக காவேரியுடன் சங்கீதமும் பாய்ஞ்சுகிட்டிருந்த ஊர்ல, சங்கீதம் படிச்சுட்டு தன் பாட்டுக்கு தனியா பாடிட்டிருந்த பொண்ணு(என் அம்மாதான்!!) கிளார்க்(எங்க அய்யன்) பாட்டுக்கு எசபாட்டு பாட ஆரம்பிச்சாங்க.
ஆனா பாருங்க, அந்த தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் இல்ல. அஸ்வமேத யாகமெல்லாம் பண்ணலையின்னாலும் எக்கசக்கமா கோவில் குளத்தை சுத்தி, அப்பறம் தலைசுத்தி அந்த பாட்டு டீச்சர் மூனாவது முறையா கருத்தரிச்சாங்க. ஏற்கனவே ரெண்டு முறை குழந்தைகள் தவறியதால ரொம்பவே கலக்கத்துல இருந்தாங்க அந்த தம்பதி. இதுக்கெல்லாம் நடுவுல வேலைக்கு வேற போய்வந்து அந்த அம்மா கொஞ்சம் சிரமப்பட்டுகிட்டிருந்ததை பொருத்துக்க முடியாத கடவுள், அந்த குட்டி பாப்பாக்கு சுமார் ஒரு 50நாள் முன்னாடியே(8 1/4 மாசத்துல) உலகத்தை பார்க்க பெர்மிட் குடுத்துட்டாரு. இப்படியாக ரெண்டுச்சாமியா(நன்றி: சாமி திரைப்படம்), அம்மாவ கஷ்டப்படுத்த கூடாதுனு அவசர அவசரமா பொறந்தேன். இவ்ளோ அவசர அவசரமா பொறந்ததாலோ என்னவோ அதன் பிறகு இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாமே கொஞ்ச்ம் ....ஸ்ஸ்ஸுலோ. அடுத்ததா அந்த அவசரகுடுக்கையை உயிர் பொழைக்க வைக்க என்னென்ன பாடுபட்டாங்கனு பார்ப்போம்......

0 comments: