இதிலும் குழந்தைகளா?

அமீர் கசவ்(எ)அஜ்மல் கசப்! இந்த பேரை இந்திய மக்கள் அவளவு சீக்கிரம் மறக்க வாய்ப்பில்லை. நவ 26 2008, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன். சுமார் 200 உயிர்களை பலிகொண்ட கொலைவெறி தாக்குதல் முடிந்து 5 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் இவன் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு கொண்டே செல்லப்படுகிறதே அன்றி தீர்ப்பு வழங்கபோவதற்கான அறிகுறியில்லை. இந்நிலையில் இதில் புதிதாக ஒரு குழப்பம், கசப் சிறுவனென்றும் அவனை சிறுவர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

நான் தெரியாமத்தான் கேக்குறேன் கள்ள தோணி வழியா நாட்டுகுள்ள ஊடுருவி 3 நாள் ராணுவத்துக்கே தண்ணி காட்டி, 200 உயிர்களை கொன்ற அரக்கன் குழந்தையா? சரி சிறுவன்னு வெச்சிக்கலாமுனாலும் அவனிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசரனைபடி அந்த கம்முனாட்டியின் வயது 21, ராணுவத்தையே திண்டாட வெச்சவன் போலீசுக்கு பயந்து(?) ரெண்டு வயசு கூட சொல்லியுருந்தா கூட 18 வயசா இருக்கலாம். நம்ம நாட்டுல சிறுவர்கள்னா 14 வயசுக்கு கீழ் உள்ளவர்கள்தான். இப்படி இருக்க இவன் சிறுவனானு எலும்ப சோதிக்கணும், நரம்ப சோதிக்கனும்னு நேரத்தை கடத்தாம அந்த பரதேசி எலும்ப எண்ணீயிருக்கவேனாம்.

இதை விட்டுட்டு 5 மாசமா ஒரு தீவிரவாதிக்கு நூத்து கணக்குல போலீசு பாதுகாப்புக்கு, அவனுக்கு வாதாட ஒரு வக்கீல் அவங்கள அது சரியில்லை இது சரியில்லைனு மாத்துறது, பேப்பர் படிக்கலாமா கூடாதான்னு ஒரு கேசு அதுல அவன் புத்தகங்கள் மட்டும் படிக்கலாமுன்னு தீர்ப்பு, அந்த நாதாரி சத்திய சோதனை படிச்சு காந்தியா மாறப்போறானா? இத இப்படியே விட்டா என்ன ஆகும் பாராளுமன்ற தாக்குதல் நடத்துனவங்களுக்கே தண்டனைய நிறுத்தி வெக்கிற நம்ம நாட்டுல கசப் சின்ன குழந்தை, சுட்டா செத்துருவாங்கனு தெரியாம செஞ்சுட்டான், 100 கோடில 200 பேர்தானே கொன்னான்(அவங்களா இவன் சுடும் போது குறுக்க வந்து செத்துட்டாங்க)அதனால இவனை மன்னிச்சு விடுதலை பண்ணி இந்தியா மனிதநேயத்துல புடுங்கிடிச்சுனு சொல்லிக்கலாம்பாங்க.

இதெல்லாம் பார்க்க வேண்டாமுன்னுதான் ஓம்ப்லே மாதிரி உண்மையான தேசபற்றுள்ளவரு இறைவன் கிட்ட போய்ட்டாரு. அவரு உயிரை குடுத்து புடிச்சா இங்க நாம மயி..!! மயிலிரகால அவன தடவி குடுக்குறோம். ரத்த காட்டேரிக்கு அடிபட்டா மயிலிறகால் வருட தேவையில்லை!. தண்டனைகள் கடுமையானால் மட்டுமே தவறுகள் தவிர்க்கப்படும்!! இந்திய இறையாண்மை மேடை பேச்சுகளால் மட்டும் கெடாது இது போன்ற தவறான முண்ணுதாரனங்களாலும் தான்!!!

4 comments:

Unknown 29 May 2009 at 6:16 pm  

சிலவேளைகளில் சட்டம் காலை வாரி விடும் போது மக்களெல்லாம் சட்டத்தை கையிலெடுப்பது தவறா?

வாழவந்தான் 30 May 2009 at 4:24 pm  

கருத்துக்கு நன்றி கனககோபி.
நம்மூரு சட்டம் சல்லடை மாதிரி. ஓட்டைகள் அதிகம்

பிரபாகர் 2 June 2009 at 6:43 am  

நண்பரே,

உங்களின் பதிவு என்னுள்ளும் இருக்கும் குமுறல்களை, ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. இன்னுமொரு விஷயம், இனிமேல் பாகிஸ்தானில் இருந்து அனுப்பும்போது 14 வயதுக்கு குறைவாக ஆவணங்ளை, ஏன் ஆளையே தயார் செய்து அனுப்புவார்கள். நம்முடைய வரிப் பணத்தில் அந்த நாய்க்கு பண்ணும் சவர்த்தனைகளை பார்க்கும்போது உண்மையில் வயிறு எரிகிறது.

நல்ல பதிவு.

நன்றி நண்பரே...

பிரபாகர்.

வாழவந்தான் 2 June 2009 at 5:02 pm  

கருத்துக்கு நன்றி நண்பரே
பார்த்தீங்களா இந்த தாக்குதலின் மாஸ்டர் பிரைன்னு சொல்லப்பட்ட ஹபிஃஸ் முஹம்மது லாகூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இப்படியே வாயில வெரல வெச்சிகிட்டு இந்தியா இதையும் பார்க்கும்