பணையம்

      வணக்கம், சரியாக 7 மாதங்களுக்கு பிறகு என் வலைப்பிரவேசம். அப்படி இப்படின்னு சில பிரச்சனைகளை தாண்டி வர இந்த நேரம் தேவைப்பட்டது. இத்தனை நாளாக இவன் எதாவது எழுதுவான்னும், எழுதினா பார்த்துக்கலாமுன்னு இருந்தவங்களுக்கும் நன்றி.
இந்த பதிவு நான் சமீபத்துல ஊர் சுத்தினது பத்தி தான்.(நன்றி: SJ Surya அவருதான் டைட்டில் போடும்போதே கதையே சொல்றாருல்ல).


      ஏதோ எம்பாட்டுக்கு இந்த ரிசஷன்லையும் தாக்கு புடிச்சு வேலைக்கு போய் ஆபீசையே சுத்திவந்த நான், இப்படியே போனா வாழ்க்கைல உயர முடியாதுன்னு டிச 31 ஆம் தேதி முடிவு பண்ணினேன். அதனால பொறக்குற வருஷத்துலயாவது ஒரு உயர்ந்த நிலைய அடையனுமுனு ஊட்டி போலாமுன்னு நெனச்சேன். நம்ம பர்ஸ் வீகதுக்கு கோத்தகிரி பெண்டு கூட தாண்டதுன்னு தெரிஞ்சதால ஏழைகளின் ஊட்டிக்கு போலாமுன்னு முடிவாச்சு.31 ஆம் தேதி ராவோட ராவா புதுவருஷத்துக்கு ராவா கூட அடிக்காம ஒரு கடத்தல் வண்டிய(அதாங்க omni) புனியவான் ஒருத்தர் கிட்ட உஷார் பண்ணியாச்சு. அப்படி இப்படி மயக்க பொடி தூவி ஒரு 6 நண்பர்களையும் சேர்த்தாச்சு.நான் சைக்குளுக்கு ஸ்டாண்டு கூட போடத்தெரியாம சுத்தின காலத்துலேயே டிவிஎஸ்50 ஓட்டுன எங்க பாஸ்-தான் இந்த ஊர்சுத்தி பொழப்புக்கு சாரதீ(spelling mistake அல்ல ஒரு fire இருந்தா நல்லாயிருக்கும்னு).


      எனக்கு குளிக்கிற தண்ணில கண்டம்னு சிவகாமி கம்ப்யுட்டர் சொல்லிருக்குன்னு ஊற நம்பவெச்சிருந்தாலும், குளிச்சுட்டு வரலைனா boating போகும்போது ஏரில தள்ளிவிடப்படுவேணு அன்பா சொன்னதால இரவு(?) 5 மணிக்கெல்லாம் குளிச்சு கெளம்பியாச்சு. போன முறை ஏலகிரி போனபோதே ஸ்ரீபெரும்புதூர் பய்பாசுல ஒரு INDIANA COFFE SHOP கண்டுபுடிச்சிருந்தோம் அவனுக்கு புது வருஷத்துல ஒரு தொழில் வைப்பா இருக்கட்டுமேனு அங்க ரதத்த பார்க் பண்ணிட்டு dress போடாத டீ, சில வடைகள சாப்டு கிளம்பினோம்.(ஆமா சாமி! INDIANA COFFEE SHOP டீக்கட தானுங்கோ). நம்ம ஊருல highways -ல புளியமரத்தவிட அதிகமா ஒன்னு இருக்கு, அதான் toll கேட்ஸ். ஒரு toll gate -ல இருந்து ஸ்டாட் பண்ணி 3 கீர் வரதுக்குள்ள அடுத்த toll gate வந்துருது. இந்த டூர்ல வாங்கின toll bills வெச்சு ஒரு கொயர்ல ஒன் சைட் நோட்டு தைக்கலாம். toll gate கு அடுத்து அதிகமா இருக்குறது fly over. ஒரு ரோலர் கோஸ்டர் effect தான். ஒருமாதிரி 10 மணிபோல வேலூர் தாண்டி ஒரு restaurant க்கு சாப்ட போனா உள்ள நொழையும் போதே எங்க பாஸ் வண்டிய பார்கிங்ல perfect -ஆ நிறுத்தறேன்னு பக்கத்துல இருந்த மார்பிள லேசா டிச்சு பண்ணிட்டாரு, அது ஏதோ லோக்கல் duplicate கல்லுபோல டிச்சு பன்னதுக்கே ஒடஞ்சிடுச்சு. நல்லவேளையா யாரும் பாக்குறதுக்குள்ள அவசர அவசரமா சாப்டு வந்து பாத்தா எங்களுக்கு பக்கத்துல பார்க் பண்ணினவன் எங்கள விட பெருசா டிச்சு பண்ணி வெச்சிருந்தான். ஆனா இந்த அவசரத்துல restaurant -ல இருந்த சில பொம்மைகளை கூட சரியா பாக்கமுடில.[ பொம்மைனா figure. இவளோ அழகா பொண்ணுங்கள பெத்தாங்களா செஞ்சாங்களான்னு ஒரு doubt இருக்குறதால இந்த பேரு]


      ஒரு வழியா ஏற்காடு அடிவாரத்துக்கு வந்தாச்சு, வயத்துல மணியும் அடிச்சாச்சு. மலைக்கு மேல கிழக்கு மேற்க்கே தெரியாதே இதுல எங்க நல்ல restaurant கண்டுபுடிக்கனு யோசிச்சப்ப, பாஸுக்கு 'நாகம்மா' காலிங்(அட நாகம்மானா மாமியார்பா).எங்க பாஸோட பைனான்ஸ் அம்மா(பைனான்ச்னா கட்டிக்க போற பொண்ணு). என்னடா மலை, மேகம்னாங்க நம்மூரு மாறியே வேற்குதேனு கீழ இருந்த கடக்காரர்ட கேட்டா, ஒரு 5km போங்க குளிருல ஓரஞ்சிருவீங்கனாறு. நாங்களும் ஒரு 30km ரிங்க ரிங்கா ரோசச்னு 20hair pin bend லாம் தாண்டியும் மெரினாவுல அடிக்கிற காத்து மாதிரிதான் இருந்தது. அப்பத்தான் தெரிஞ்சுது அந்த பயபுள்ள சொன்னது ரோட்ல 5km இல்ல ராக்கெட்டு மாதிரி நெட்டுக்குத்தலா 5km போனான்னு.பாவி கொஞ்சம் பேரம் பேசினதுக்கு இப்பிடி கோத்து வுட்டுடிச்சு.நாகம்மா guidance -ல ஒரு நல்ல restaurant சாப்டு முடிச்சாச்சு. இவங்களுக்கு எப்படிடா இவ்ளோ விஷயம் தெரிஞ்சுதுன்னு விசாரிச்சப்பத்தான் பூனைக்குட்டி வெளில வந்துது(அதாவது உண்மை தெரிஞ்சிச்சு). நாகாமா பேருல அங்க ஒரு எஸ்டேட் இருக்குதான்.[பாஸுக்கு எப்டியோ, நான் honey moon வாறதுக்கு ஒரு எடம் கெடச்சிடுச்சு]. இனி நாங்க தங்க தான் ஒரு palace கண்டுபுடிக்கணும்...
(தொடரும்...)
[பொதுவா ஊர் சுத்தினதா பயண கட்டுரை தான் எழுதுவாங்க, ஆனா நான் இத பதியாட்டி எனக்கு பொண்ணு தரவர வீட்டார்கிட்டலாம் என்னபத்தி ரொம்ப நல்லவிதமா சொல்லுவோம்னு பயமுடுத்தினதால் என் மணவாழ்கைய பணையம் வெச்சு எழுதறேன். அதனால இது பணைய கட்டுரை. இது நல்லா இருக்கு இல்லைன்னு comment -டி எனக்கு தாலி பாக்கியம் அருளுங்க சாமியோவ்!]

2 comments:

பிரபாகர் 10 January 2010 at 5:38 am  

வணக்கம் நண்பா!

உங்களின் வருகையால் மிக்க மகிழ்ச்சி. நான் எழுத ஆரம்பித்த புதிதில் என்னை ஊக்குவித்தீர், உங்களின் பின்னூட்டம் மட்டுமே எனது ஆரம்ப இடுகைகளில் இருக்கும். பின் நிறைய நண்பர்கள், தொடர்பவர்கள், 100 ஐ தாண்டிய இடுகைகள்... இருப்பினும் உங்களை நிறைய இழந்த வண்ணம் இதுவரை உணர்ந்திருக்கிறேன்.

அசத்தலாய் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள், நகைச்சுவைப்பொடிகளைத் தூவி...

நிறைய ரசித்தேன் (சில எழுத்துப் பிழைகள், திருத்திவிடுங்களேன் ப்ளீஸ்)...
கடத்தல் வண்டி, டோல் கேட், சாரதீ, பொம்மைங்க..... என.

அசத்துங்கள்... ஆர்வமாய் அடுத்து படிக்க,

பிரபாகர்.

வாழவந்தான் 13 January 2010 at 1:54 am  

பின்னூட்டத்துக்கு நன்றி.
பிழைகள் இருக்கும்னு தெரியும், ஆனா என்னனு கண்டுபுடிக்கிற அளவுக்கு நம்ம யானை(ஞானம்) இல்ல, மன்னிக்க. அதையும் தாண்டி அர்த்தம் விளங்கி படித்ததற்கு மற்றொரு நன்றி