'சாமி' போல் போலீசிலிருந்து பொறுக்கியாகி, புரட்சித்தலைவரின் பாதுகாவலருமாகி, இன்று கல்வித் தந்தை(??) ஆகிவிட்டவரின் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம். பராமரிப்பு பணிகளுக்கு பின் சரியாக மூடப்படாத மின்சார கம்பி 'நிஷாவின்' அருளால் வெளிவர, மின்சாரம் தாக்கி கிருஷ்ண்கிரியை சேர்ந்த பிரசாத் குமார் என்ற முதலாம் ஆண்டு எஞ்சினீரிங் மாணவர் பலியானார். இது நிர்வாகத்தின் கவனகுறைவால் ஏற்பட்டதென்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாகவோ, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. சென்னை புறநகரில் உள்ள இதே யுனிவர்ஸிடியில் சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவரை ஆஸ்பிடலில் சேர்க்க பல்கலை நிர்வாகம் மறுக்க, மாணவர்கள் போராடி அவனை மருத்துவமணைக்கு அனுப்பியுள்ளனர்.
பல கனவுகளுடன் சில லட்சங்களை(7 லட்சம்)கொடுத்து எஞ்சினீரிங் சேர்த்து, மகனையே பறிகொடுத்து நிற்கும் பெற்றோருக்கு பல்கலை நிர்வாகத்தின் பதில் என்ன?? இதுபோன்ற நிர்வாகத்தால் இன்று கல்வி வியாபாரமல்ல அதையும் தாண்டி விபரீதமாகி வருகிறது!!!
கல்வி - வியாபாரமா? விபரீதமா??
Posted by
வாழவந்தான்
Monday, 8 December 2008
Labels: அரசியல்/சமூகம் , புலன் அறிந்தவை
3 comments:
//இதுபோன்ற நிர்வாகத்தால் இன்று கல்வி வியாபாரமல்ல அதையும் தாண்டி விபரீதமாகி வருகிறது!!!/
அரசியல் நிர்வாகமும் எனக்கு அப்படி தான் தெரிகிறது
வேர்ட் வெரிபிகேசனை எடுத்துறலாமே?
கல்வி வெறும் வியாபாரமாகி எவ்வளவோ காலம் கடந்தாச்சு...வியாபாரிகளுக்கு லாப...நஷ்டம் மட்டும் தான் குறிக்கோள்,மனித உயிர் ...மாணவன் உயிர் என்பதெல்லாம் எப்போது தான் மதிக்கப் பட்டது?இப்போது மதிக்கப் பட?!
மாணவ சக்தி தான் உலகில் வலு வாய்ந்தது. அதை மாணவர்கள் உணர்ந்து குரல் கொடுக்காத வரைக்கும் இது ஒரு தனி மனிதரின் பிரச்சனை. பணம் படைத்தவர்கள் எதையும் வாங்கி விடக்கூடிய அரசியல் சூழலில் வாழ்கின்றீர்கள். கேட்க கஸ்டமாகத்தான் இருக்கின்றது.
Post a Comment