திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளின்படி ஆளுநர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் இனி பொது நிர்வாகம், மாவட்ட வருவாய், தொழில்துறை, சிறுபான்மையினர் மற்றும் சமூக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளையும் சேர்த்து கவனித்துகொள்வார்.தமிழகத்தின் முதல் துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்!!!
தந்தை மகனுக்காற்றும் உதவி
Posted by
வாழவந்தான்
Friday, 29 May 2009
Labels: அரசியல்/சமூகம்
9 comments:
துணை முதல்வர்!
வயசான ராஜா
மகனுக்கு
முடிசூட்டுவது
தொன்று தொட்டு
வரும் பழக்கம்
தானே நாட்டில்!
கருத்துக்களுக்கு நன்றி வால்..
அதனால்தான் அரசியல் மாநாடுகளில் செங்கோல் தராங்களா?
ஸ்டாலின் துணை முதல்வர் ஆனது ஒன்றும் பெரிய ஆச்சர்யமான விஷயமில்லை. ஸ்டாலின் துடிப்புள்ள ஒரு அமைச்சர், அரசியல்வாதி. சென்னையின் மேயராக இருந்தபோதே சில நல்ல விஷயங்களைச் செய்தார். ஆனால், அழகிரிக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்த பிறகே ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது வருந்தத்தக்கது.
கருத்துக்கு நன்றி
//
சென்னையின் மேயராக இருந்தபோதே சில நல்ல விஷயங்களைச் செய்தார்.
//
நிச்சயமாக. ஆனாலும் இவர் திரும்ப கலக கண்மணிகளோட சேர்ந்து வேதாளம் முருங்கைமரம் ஏறாமல் இருந்தால் நல்லது.
//
அழகிரிக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்த பிறகே ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி
//
இல்லைனா உள் நாட்டு/வீட்டு கலவரம் வரும் ;-)
தலைப்பே சொல்லிடிச்சே
அத்-துனையும்.
வாங்க ஜமால்...
கருத்துக்கு நன்றி..
இனி மகன் தந்தைக்கு என்ன செய்யறாருன்னு பாப்போம்
வாழவந்தான்...
எல்லாம் சரி, மக்களுக்கு அரசியல் வாதிகள் ஆற்றுவதை ஆற்றாமல், உண்மையாய் நல்ல திட்டங்களை இன்னமும் செய்வார் என விழைவோம்...
பிரபாகர்...
நிச்சயமாக திரு பிரபாகர்.
இவர் சென்னை மேயராக இருந்ததை வைத்து பார்க்கும் போது நல்லது செய்வாருன்னு நம்பலாம். ஆனால் எவ்ளோ நாளைக்கு என்பதே கேள்வி
//ஆனால் எவ்ளோ நாளைக்கு என்பதே கேள்வி//
வாழவந்தான்...
அதனால் தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று தான் பார்க்கும் நிலை இன்று...
பிரபாகர்...
Post a Comment