திரு டி. டி. சக்கரவர்த்தி இந்தியாவின் கண்பார்வையற்ற முதலாவது நீதிபதி ஆவார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள திமிரி என்ற ஊரைச் சேர்ந்த இவர் தன் நான்கு வயதில் அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார். வழக்குரைஞர் பட்டம் பெற்ற இவர் துவக்கத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி பெற்றார்.
பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். தமிழக அரசின் மாவட்ட நீதிபதிப் பயிற்சிக்கு தேர்வு பெற்றார்.2008ல் நடந்த தமிழக அரசின் தேர்வாணைய நீதிபதிகள் தேர்வுக்கான தேர்வில் 13-வது இடம் பெற்றார். தமிழ்நாடு மாவட்ட ஜூடிசியல் அகாடமியில் 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். வால்பாறை நீதிமன்றத்திலும் பயிற்சி நீதிபதியாக இருந்தார். தனது 41 ஆம் வயதில் ஜூன் 2009 இல் கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் சக்கரவர்த்தி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நன்றி: விக்கிபீடியா மற்றும் தி ஹிந்து
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...
Posted by
வாழவந்தான்
Wednesday, 10 June 2009
Labels: புலன் அறிந்தவை
4 comments:
இப்படி அபூர்வத் தகவலெல்லாம் கொடுத்து கலக்கறீங்க
நன்றி விஜய்.
ஆனால் பாருங்க எவ்ளோ தேடியும் திரு. சக்கரவர்த்தியின் புகைப்படம் கிடைக்கல
தகவலுக்காக நன்றி வாழவந்தான்...
இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதுங்களேன்...
பிரபாகர்.
கருத்துக்கு நன்றி பிரபாகர்
இன்னும் அதிகமாக எழுத முயற்ச்சிக்கிறேன்
Post a Comment