இனி ஒரு விதிசெய்வோம்

டிச 1. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்உலகெங்கும் பேரணி, பிரச்சாரம் என்று விழிபுணர்வு ஏற்படுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருக்க நம்ம தமிழ் நாட்டுல என்ன நிலைமைனு கவனிக்கனும்..ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு விக்னேஷ் என்ற மூன்று வயது சிறுவன் அவனது தந்தையாலேயே மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டான்(சாகும்வரை). நல்லவேளை விஷயம் காவல்துறைக்கு தெரிந்து அவர்கள் குழந்தையை மீட்டு அவன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான். அந்த குழந்தை இவ்வாறு கொடுமைப்பட காரணம் அவனுக்கு எச்.ஐ.வி பாஸிடிவ். பாவம் அவன் இந்த வருட எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்திற்குள் மரணமடைந்தான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் மரணத்திற்கு பிறகு அவன் பாட்டி கூட அவனை நெருங்கவில்லை...
சில தினங்களுக்கு முன் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்த பெண்ணை அடக்கம் செய்ய காசு இல்லை என்று அவள் பெற்றோர் மறுத்துவிட, டாக்டர்கள் பண உதவி செய்தும், அதை பெற்றுக்கொண்ட பெற்றோர் பின் மாயமானார்கள். காரணம் அந்த பெண் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவள்.நோயாளிகளின் நிலை இதுவென்றால் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கும். வருடத்திற்கு 2000 போஸ்ட்மார்டம்(இதில் குறைந்தது 50 எய்ட்ஸ் பாதித்தவர்கள்) நடைபெறும் அரசு மருத்துவமணைகளில் யூ.என்.இன் சுகாதார அமைப்பு பரிந்துரைத்த எய்ட்ஸ் தர்காப்பு முறைகள் என்பது கனவில் செய்துகொள்ள வேண்டிய ஒன்று. பாவம் மருத்துவமணை ஊழியர்கள் ஒவ்வொரு போஸ்ட்மார்டத்திற்கும் அவர்கள் மரண பயத்தில் உள்ளனர்.இவை மாற்றப்படுமா??