31-10-2008 அன்று பூங்கொத்தும் மூள் கிரீடமும்

இந்த வருடமும் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு இந்த பூங்கொத்து வழங்கப்படுகிறது.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

250கோடி செலவில், 6வழிப் பாதை, 2அடுக்கு போக்குவரத்து என உலகத் தரத்தில் அமைக்க பட்ட சென்னை கத்திபாரா வண்ணத்து பூச்சி வடிவ பாலத்தில் விபத்தில் இரந்தவரின் ரத்தத்தால் சிகப்பு வண்ணம் பூச காரணமாய் இருந்த சென்னை போக்குவரத்து காவல்(செ.போ.கா), நெ.து.
இந்த துறையினர் இந்த முறை முள்கிரீடம் பெறுகின்றனர்.
பி.கு: விபத்துக்களை தொடருந்து மேலும் 30 வழிகாட்டி(சைன்போர்டுகள்) வைக்க செ.போ.கா முடிவு செய்துள்ளது(ஏற்கனவே 90 வழிகாடிகள் உள்ளதாக செ.போ.கா குறிப்பிட்டுள்ளது). கத்திபாரா, போரூர் போன்ற சாலை சந்திப்புகளில் சிசிடிவி காமிராக்கள் வைக்கவுள்ளது செ.போ.கா.

மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ்

கடந்த செவ்வாய் என் திருவாய் கண்டதையும் தின்ற பலனாய் தூக்கம் வரலை. பெட்ரூம்ல என் ரூம்மெட்(நான் என்-திராயன் எழுத காரணமானவன் ) 'அழகன்' படத்தில் வரும் 'என் வீட்டில்....' பாட்டு ரேஞ்சுக்கு மொபைல்ல பேசிக்கிட்டிருந்தான். 12மணி தாண்டியும் அவன் ஓயாததால அவன் கிட்ட இருந்து தப்பிக்க எஃப்.எம் கேக்க ஆரம்பிச்சேன்.
அப்ப செம சூடான ஒரு எஃப்.எம்ல லவ் டாக்டர் ஒருத்தரு பேசிக்கிடிருந்தாங்க... அவங்க இன்னிக்கு நம்ம கிட்ட மிஸ்.எக்ஸ் பேசவந்திருக்காங்க, அவங்க கிட்ட பேசுரதுக்கு முன்னாடி ஒரு பாட்டு கேளுங்கனு ரெண்டு பாட்டு போட்டாங்க. சரி ரொம்ப நல்ல்வங்களா இருகங்களேனு நானும் பாட்டு முடிஞ்சு நிகழ்ச்சிய தொடருந்து கேட்டேன்.

அந்த மிஸ்.எக்ஸ் அவங்கள பத்தி ஒரு சிறுகுறிப்பு(சுமார் 3நிமிஷம்)சொன்னாங்க. உடனே நம்ம லவ் டாக்டரு யாருக்கெல்லாம் மிஸ்.எக்ஸ புடிசிருக்கோ உடனே உங்க மொபைல எடுத்து ஒரு 5டிஜிட்(இப்ப எல்லாம் டிவி, ரேடியோ இதுக்கெல்லாம் விளம்பரத்தை விட இந்த எஸ்.எம்.எஸ் தான் அதிக வருமானம் தருதோ?) எண்ணுக்கு மெசேஜ் அனுப்புங்க, பிறகு நீங்க மிஸ்.எக்ஸோட பிரெண்டு புடிசிக்கலாம் அப்படினாங்க. 'ஆகா இது.. அது இல்ல..' அப்படினு நான் கொஞ்சம் ஷாக்காகி முடிக்கிறதுக்குள்ள இன்னும் ரெண்டு பாட்டு ஓவர். அப்பறமா கொஞ்சம் கொஞ்சம் பாட்டுக்கு நடுவுல மிஸ்.எக்ஸ் அவங்களோட கனவு கண்ணன் பத்தி சொன்னாங்க. அது என் கிரெடிட் கார்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ விட பயங்கரமா இருந்துது.
இவங்க சொல்லி முடிச்சதும் லவ் டாக்டரு ஒரு அருமையான கருத்து சொன்னாங்க மிஸ்.எக்ஸ் ஒரு கிளாசிக்கல் டான்சர் அதனால மிஸ்டர்.எக்ஸ் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாம். அப்படி பார்த்தா பத்மா சுப்ரமனியம் மாதிரி டான்சர் பின்னாடி ஒரு எக்ஸ் கூட்டமே அலையனும். அடப்பாவிகளா கலைய கொலை ஆக்கிட்டீங்களே!!
மணி 12.45 ஆச்சு.. நம்ம லவ் டாக்டரு மிஸ்.எக்ஸ்க்கு வாழ்த்தெல்லாம் சொல்லி முடிச்சாங்க. சரி இதோட இந்த காமெடி டைம் முடிஞ்சுதுனு நினைச்சேன். ஆனா அப்பதான் அந்த பயங்கரம்... லவ் டாக்டரு சொன்னாங்க "வாங்க நம்ம போன வாரம் பேசின மிஸ்டர்.எக்ஸ்கு கனவு கன்னி கிடைச்சாங்க்களானு பார்ப்போம்னு" சொல்லி 3 விளம்பரத்தை ஓட்டி விட்டாங்க. பின்னர் ஒருத்தருக்கு போன் பண்ணினா, அந்த் பக்கம் ஒரு மிஸ்டர்.எக்ஸ் தூக்க கலக்கத்துல "எனக்கு இன்னும் கனவு கன்னி கிடைக்கல.. நான் சொன்னேன்ல எனக்கு கிடைகாதுனு.." இப்படி சொன்னதையே சொல்லிட்டிருந்தாரா... நம்ம லவ் டாக்டரு உடனே "இல்ல எக்ஸ் நீங்க ரொம்ப லக்கி உங்களுக்காக ஒரு மிஸ் காத்துகிடிருக்காங்க. அவங்க கிட்ட பேசுங்க" அப்படினு ஒரு மிஸ்.எக்ஸ்கு போன் பண்ணினாங்க. அப்ப ஒரு மிஸ்.எக்ஸ் எக்கச்ச்க்க வெக்கத்தோட மிஸ்டர்.எக்ஸ் கிட்ட பேசினாங்க. மிஸ்டர் எக்ஸ ஏன் புடிக்கும்னு அபத்தமா(தெய்வீகமா?) ஒரு காரணத்தையும் சொன்னாங்க. அதுல நம்ம மிஸ்டர்.எக்ஸ் அப்படியே கரைஞ்சுபோய்டாரு. கடைசியா லவ் டாக்டரு மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸோட பேர சொல்லி, அவங்க உறவு பலமா இருக்க வாழ்த, மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ் சிரிக்க, இப்படியும் ஒரு நிகழ்சிய தூங்காம கேட்ட என்ன நினைச்சு நானே சிரிப்பா சிரிக்க நிகழ்சி முடிஞ்சிது.
இப்படியே போனா லெட்டர் காதல், போன் காதல், பாத்து காதல், பாக்காத காதல், இண்டெர்னெட் காதல் இந்த வரிசையில் ரேடியோ காதலை வைத்து ஒரு தமிழ் சினிமாவும், சில கொலை, தற்கொலைகளை செய்தியாவும் பாக்கலாம்.
பி.கு: இன்னும் எஸ்.எஸ் இன் போன் கால் முடியவில்லை.... (அவன் ஒரு தொடர்கதை!!!)

24-10-2008 அன்று பூங்கொத்தும் மூள் கிரீடமும்

சந்த்ராயனை வின்னில் செலுத்தி வெற்றி கண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்தமுறை பூங்கொத்து வழங்கப்படுகிறது.

பிரிவினைவாதம் என்னும் பெயரில் அரசியல் காரணங்களுக்காக வைகோவை கைது செய்து தன் இரங்கல்பாவில் தானே அச்சுப்பிழை ஏற்ப்படுதியதற்க்காக இந்த முறை முத்தமிழ் வித்தகர் முள் கிரீடம் பெருகிறார்.

மலர்வளையம்

இது என்ன புது பகுதின்னு யோசிக்க வேண்டாம், பொதுவா அஞ்சலின்னு தலைப்போட வர இரங்கல் செய்திகள் தான்.

இந்த பதிவின் முதல் இரங்கல் பா..
அமரர் ஜெ சித்திக்கு இதை சமர்ப்பிக்கிறேன்..

நான் பார்த்து ரசித்த பெண்களில் ஒருவர், புன்னகை இதயத்தை திறக்கும் சாவி என்பதை நிரூபித்தவர். இன்று நீ இறைவனடி சேர்ந்தாலும் என்றும் எங்கள் புன்னகையில் வாழ்வாய்!!!

பட்ட கல்லில் படும்

நேற்று இரவு ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தேன். வானிலை அறிக்கை உண்மை என்பது போல மழை கொட்டத தொடங்கியது. ரோட்டை பிறிக்க சென்னை போக்குவரத்து காவலால் போடப்பட்ட கற்கள் மூழ்க ஆரம்பித்தன. அப்போது அந்த வழி வந்த சென்னை சாலைகளின் செல்லப்பிள்ளை(ஆட்டோ) முன்னால் சென்ற இன்னொரு பிள்ளையை முந்தப்பார்து மூழ்கிய கற்களில் மோதி ஒரு கல்லை உடைத்ததோடு தன் ஒரு காலையும் இழந்து நொண்டியபடியே சென்றது. அடுத்த சில நொடிகளில் புயலாய் வந்த பஸ் ஒன்று தன் பங்குக்கு மூன்று கற்களை பதம்பாற்து அதே வேகத்தில் மறைந்தது. இதில் சிதறிய ஒரு கல் மேல் குட்டி யானை(லோடு ஆட்டோ)ஒன்று லேசக மோதி இன்னும் கொஞ்சம் நடுரோட்டிற்கு தள்ளி விட டூ-வீலரில் வந்த ஒருவரின் காலில் காயம் ஏற்படுத்திய பிறகு, அந்த டூ-வீலர் ஆசாமி, மற்றும் சில நல்ல உள்ள்கங்களின் முயற்சசியால் கற்கள் எல்லாம் மீண்டும் பழைய நிலையான மூழ்கிய நிலையில் அதே இடத்தில் வைக்கப்பட்டன.
இதற்குள் பஸ் வந்துவிட, அதன் தொடர்ச்சியை பார்க்க முடிய வில்லை. ஆனால் பஸ்ஸின் ஜன்னல் வழி பார்த்தபோது முதல் பிள்ளையை போல் மீண்டும் ஒரு பிள்ளை வைப்பர்(மழை நீர் துடைப்பான்????) இல்லாமல் எதிர்திசையில் சென்றது.

என்-திராயன்

சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இன்று, சென்னையின் மழைக்காலத்தில் ஒரு காலை பொழுதின் வெற்றிகரமான என் ஆபிஸ் பயணம் இது.
என்றும் இல்லா திருநாளாக இன்று ஆபிஸ்-க்கு சரியான நேரத்தில் செல்ல நேற்றிரவே முடிவு செய்தேன்(இதற்கு என்னுடன் குடித்தனம் நடத்தும் நண்பனின் தொல்லையும் ஒரு காரனம்)

(படிப்பவர் மன்னிக்க - இன்று முதல் பதிவுகளிள் செந்த்தமிழுடன் சென்னைத்தமிழும் கமழும்)
இதுக்காக, அதிகாலை 8மணிக்கே அலாரம் வைத்தது போல் எழுப்பியும்விட்டான் அந்த நல்லவன். மழையை கர்ரணம் சொல்லி லேட் ஆக்கலாம் என்றால் எனக்காகவே நின்றது போல் 9மணிக்கு மழை நின்றது. இதற்ககுள் என் நண்பன் பொருமை அதிகமாகி எனக்கு அன்பாக வலியுறுத்த வேற வழி இல்லாம வீட்டிலிருந்து கிளம்பி 9.30மணிக்கு பஸ் ஏறியாச்சு. கூட்டத்தில் போராடி புட்போர்ட்ல எடம் பிடிச்சு, ஒரு கைபுடில தொங்கி போராடி டிக்கெட் எடுத்து முடிக்கரதுகுள்ள 20நிமிஷம் போச்சு. பின் 3நிமிஷமா பஸ் ட்ராப்பிக்ல நகராத்தால புட்போர்டுல ஏன் தொங்கணும்னு கிழ குதிச்சா ஒரு இன்ப அதிர்ச்சி. நான் எங்க பஸ்ல ஏரினேனோ அதிலிருந்து நான் 5ஆம் வகுப்பில் லெமன் அண்டு ஸ்பூனு போட்டில ஒடி ஜெயிச்ச 50மீட்டர கூட பஸ் இப்ப தாண்டல.
மழைச்சாரல், வாகனங்கள் வாரி தெளிக்கும் தண்ணீர்னு எவ்வளவு கஷ்டமிருந்தாலும் பஸ்ஸின் பாதி கூட்டம் புட்போர்டில் தான்.(இதுக்கு பேசாம பஸ் முழுக்க புட்போர்டா இருந்தா கொஞ்சம் கூட்டநெரிசல குறைக்கலாமே) அவங்களை எல்லாம் தாண்டி பஸ்ல ஏரின 30ஆவது நிமிடம் டிரைவர்க்கு பின்னாடி இடம் புடிச்சு வாழ் நாள் சாதனை பண்ணியாச்சு. அப்படி என்னதான் காரணம் டிராபிக் ஜாம்க்கு நமக்கு ஏதாவது தெரியுதானு, டிரைவர் கண்ணாடில பாத்தேன் ஒன்னும் தெரியல. ஆனா இப்படி டிரைவர் சீட்க்கு பக்கத்துல நின்னதுக்கு பலன் கொஞ்ச நேரத்துல தெரிய ஆரம்பிச்சுது. அது என்னனா, ஒவ்வொரு பிரேக்குக்ம் மொத்த கூட்டமும் முன்னாடி இருக்கரவங்க மேல சாய்ந்து, எல்லாரும் என் மேல சாய்ந்து மொத்த பஸ்ஸும் என் முதுகில் நிற்பது போன்ற பிரமை ஏற்ப்பட்டது. இதற்கு நடுவே என் அருகில் இருந்த இருவர் தங்கள் வட்ட கௌன்சிலரின் ஊழல் பற்றி பேச ஆரம்பித்தனர். அவர்கள் இந்திய அரசியலை அலசியபோது பஸ் மீனாட்சி கல்லூரியை அடைந்தது. பின்னர் டிராபிக் ஜாமின் கிளைமாக்ஸ் காட்சியாக வள்ளுவர் கோட்டம் தாண்டி காலேஜ் ரோடு வந்தபோது அருகில் இருந்தவர் கடிகாரத்தில் நேரம் 11.15 என பயம்காட்டியது.

பின்னர் இலையுதிர்கால மரம் போல கூட்டதை எல்லாம் காலேஜ் ரோட்டில் உதிர்த்துவிட்ட பின் பஸ்ஸும், நானும் கொஞ்சம் காற்று வாங்கினோம். பின் வரும் ஒரு பஸ் ஸ்டாப்பில் நமது இரட்டையர் ஒபாமா வெற்றி பெருவாரா இல்லையா என்பதை கடைசி வரை சொல்லாமலே இரங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் 5கீமி கடந்து எனது 2 மணி நேர பயணம் முடிவிற்கு வர, காலையில் என்னை ஆபீஸிற்கு அனுப்பிய ஆருயிர் நண்பனை வாழ்த்திகொண்டே இறங்கியதும் எனக்காகவே காத்திருந்தது போல் மழை கொட்ட தொடங்கியது. மழை தூரலாக மாரிய நேரம் ஃப்ளை ஓவரிலிருந்து கொட்டும் மழையருவி, ஹோலி பண்டிகையின் விட்டகுறை தொட்டகுறையாக வண்ணத்தை வாரி இரைக்கும் வாகனங்கள் இதை எல்லாம் தாண்டி, நீந்தி ஆபீஸை அடைந்தபோது மணி 12.30(வழக்கதை விட ஒரு மணி தாமதம்).
இதே போன்ற பிரம்மப்பிரயத்தனம் மாலை தேவைப்படும் என்பதால் இன்று வழகத்தை விட ஒரு மணி முன்னாடி எஸ்கேப் ஆக முடிவு செய்து நானும் என் மலைகோட்டை நண்பனும் கிளம்புவதற்காக இந்த அனு(பா)பவத்தை முடிதுக்கொள்வோமாக.
குறிப்பு: அப்படியே மாலை சென்றாலும் எனக்கு 50காசு சில்லரை தரவேண்டிய கண்டக்டர், ஒபாமாவின் முடிவை சொல்லவேண்டிய இரட்டையர், காலேஜ் ரோட்டில் காலையில் வந்த பஸ் உதிர்ந்த மலர்கள் இவர்களை சந்திக்க முடியுமா???

நிலாக்காலம்

இன்று காலை 6.21 மனிக்கு சந்திராயன்-1 பி.எஸ்.எல்.வி-சி 11 செயர்கைகோள் மூலம் வின்னில் செலுதப்பட்டது. சரியாக 18.2 நிமிட பயனதிற்க்கு பிறகு ராக்கெட்டில் இருந்து விடைப்பெற்று சந்திராயன் தன் பயணத்தை தொடங்கியது. சுமார் 387,000கீ.மி பயனித்தபின் இது சந்திரனின் சுற்றுப்பாதயை அடைந்து நவ8 ஆம் தேதி வாக்கில் அதன் இலக்கான(சந்திரனின் மேல் பரப்பிலிருந்து சுமார் 100 கீ.மி) அடையும். 355 கோடியில் உருவான சந்தராயனில் உள்ள 11 சோதனை கருவிகளில் 5 இந்தியாவில் உருவானவை. சந்திராயன் நவ 2ஆம் வாரம் நிலவில் இந்தியக்கொடியை நடுவதை தொடருந்து நிலவை அடைந்த ஆறாவது நாடெனும் பெருமையை நம் இந்தியா பெருகிறது.
குறிப்பு: இந்த வெற்றிப்பாதையில் நடந்தால் 2020ல் முதல் இந்தியர் நிலவில் கால் பதிப்பார்!!

கவலை

இறைவனை எண்ணி கவலை கொள்கிறேன்....
என்னவளுக்கே அழகை எல்லாம் அள்ளிதந்துவிட்டு
பின்னர் படைப்பதற்கு செய்வதறியாது தவிப்பதை கண்டு!!

21-10-2008 அன்று பூங்கொத்தும், மூள் கிரீடமும்

மக்கள் டிவி இந்த முறை
பட்டணப்பிரவேசத்தின் பூங்கொத்து பெறுகிறது.
காரணம் தமிழ் தொலைக்காட்சியை முடிந்தவரை தமிழிலும் சினிமா அல்லாத நிகழ்ச்சிகளும் வழங்குவதால்.
கலைஞர் டிவி இந்தமுறை
மூள் கிரீடம் பெறுகிறது, காரணம் பகுத்தறிவு பாசறையிலிருந்து வெளிவரும் இந்த டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்த்து வழங்காத பண்டிகைகளே இல்லை(இதில் நிச்சயமாக சமத்துவம் உண்டு). மேலும் இந்தியை எதிர்த்து தமிழ்வளர்த்த இவர்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளரின் உரையாடல் முதல் நிகழ்ச்சியின் பெயர்கள் வரை எதிலும் தமிழ் வாழ்வாங்கு வாழ்வதால்.

முள்ளை முள்ளால் எடுக்கின்றோம்

அக் ௨0 2008 ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் அமைப்பினர் மும்பையில் ரயில்வே கமிஷன் தேர்வு எழுத வந்திருந்த வடநாட்டவர்(குறிப்பாக உபி மற்றும் பீகார்) மீது தாக்குதல் நடத்தினர். இவர்கள் வினா தாள்களை கிழித்தும், கல்வீச்சு நடத்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் பவன் என்ற பீகார் வாலிபர் பலியானார். உலகமயமாக்கலால் எல்லைகள் விரிவடைந்துவரும் இந்த நாட்களில் ஒரு நாட்டின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியில் அரசாங்க வேலை வேண்டிநிற்பது தவறாக கருதபடுகிறது. நவநிர்மான் அமைப்பினர் இதற்கு சொல்லும் காரணம் வெளிமாநிலதவரால் இவர்கள் வேலைபரிபோகிறது என்பதாகும். இத்தனைக்கும் ரயில்வே துறை பல பிரிவுகளாக செயல் பட்டாலும் மத்திய அரசின் கட்டுபாட்டில் வரும் ஒரு இந்திய நிறுவனமே.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பீகார் சென்றதும் பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடினர். நவநிர்மான் அமைப்பினர் சொல்லும் காரணம் நியமாக இருந்தாலும்(அப்படிஎன்றால் மகாராஷ்டிராவிலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலை தேடி வருவோரையும், தொழில் செய்பவர்களையும் மகாராஷ்டிரவிற்கே துரத்த வேண்டுமா??) அதற்கு ஒரு விவசாயி மகனின் உயிர் விலை அல்ல. அதேபோல் இதை எதிர்க்க பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடியதும் கண்டிகவேண்டியதே.
இதை தொடருந்து ராஜ் தாகரே கைது செய்வதில் தாமதம் இருந்தாலும் அந்த நடவடிக்கை பாராட்ட வேண்டியதே.
குறிப்பு: ராஜ் தாகரேயின் செயலை கண்டித்துள்ள சிவசேனா அயிந்து ஆண்டுகளுக்கு முன் இதே காரணதிற்காக ரயில்வே தேர்வு துறை அலுவலகத்தை சேதப்படுத்தி அதன் சேர்மன்-ஐ தாக்கியது நமக்கு மறந்திருக்கலாம்.
எது எப்படியோ நாம் அனைவரும் நல்ல முறையில் மொழி, இனம், மாநிலம் என்ற பற்றுதலில் (அல்லது அரசியல் போர்வையில்) இந்தியர் என்பதை மறந்து மாநிலதிர்கொரு இந்தியாவாக பிரிந்தாலும் ஆச்சரியமில்லை.

காதல்

காதல் தொலைத்த புத்தகத்தில்

பிடித்த கவிதையா??

பிடித்த கவிதையின்

எழுத்து பிழையா????

ஆடாத ஆட்டமெல்லாம்

விஜய் டிவி யின் புண்ணியத்தால் தமிழ் கூறும் நல்உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது பல்சுவை ஆடல்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள். இது மெல்ல எல்லா சாட்லைட் டிவி களிலும் (ஆ )ரம்பமகிவிடது. இதில் ஆடுவதை விட அழுவதற்கு பரிசுகள் அதிகமோ? ஒரு எபிசொடிற்கு மூன்று விளம்பர இடைவேளை என்பதுபோல் இருவர் கட்டாயம் அழவேண்டும், அதுவும் அவர்கள் இருவரும் ஜோடியாக ஆடுபவர்கள் என்றால் ஆகா, சொல்ல வரதில்லை. நம்ம மக்கள் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு எலாம் தாண்டி நெடுந்தொடருபார்த்து வாழ்கை முழுக்க அழ பழகியதால் நடன நிகழ்ச்சிக்கும் அழுகை தேவையோ? இப்படியே போனா காமெடி நிகழ்ச்சில கூட கண் கலங்கும் சோக காட்சிகள் தேவை படலாம்.

ஈழமும் இந்திய அரசியலும்

செப் 19, ராமேஸ்வரத்தில் சினிமா துறையினர் சார்பில் இல்அங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து பேரணி நடைபெற்றது. இதில் கவனிக்க தக்கவை...
1. பேரணி மேடையை பார்த்த பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்க கூட்டம் போன்ற தோற்றம், படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டும் ஏன் யாரும் வரவில்லை. தொழில் முறையில் போட்டிகள் இருந்தாலும் மனிதநேயத்தோடு பங்கு கொள்ளலாமே.
2. மேடையில் பேசியவர்களில் பெரும்பாலும் இரண்டு விஷயங்களை சுட்டிகாட்ட தவறவில்லை. ஒன்று இதில் பங்கேற்காதவர்களை பற்றி தமிழ் துரோகிகள் என அறிவித்தல். இரண்டு பிரபாகரானை வீரனாக போற்றுதல்.
3. சேரன் அவர்களின் பேச்சில் மட்டும் ஒரு ஆதங்கம், காவிரி பிரச்சனைக்கு நெய்வேலி சென்றோம், ஒகேனக்கல் பிரச்சனைக்கு போராடினோம், இன்று ராமேஸ்வரம் வந்திருக்கிறோம் இதை இன்றோடு மறந்து நட்சத்திரங்களை பார்த்து ரசித்ததோடு செல்லாமல், இந்த பிரச்சனையை இந்திய அரசு தீர்க்கும் வரை தேர்தலை புறக்கணிக்கலாம் என்றார். இது சாத்தியமா? சாதியமாகினால் மீன் பிடிக்க செல்லும் இந்தியர்கள் கருவாடாய் திரும்புவதை தவிர்க்கலாம்.
4. வைகை புயல் வீசிய பொழுது இலங்கை தமிழர்களின் ஆதரவு குரலுக்கு இணையாக, மீண்டும் கல்வீச்சு நடக்குமோ என்ற கவலயும் இருந்தது.
5. தமிழ் திரை உலகின் நடிகன் என்ற முறையில் கலந்துகொண்ட ஜீவா தமிழ்நாட்டவர் அல்ல என சுட்டப்பட்டார்.
மொத்தத்தில் இந்த மேடை ராஜபக்ஷே என்னும் ஒருவரை தூற்றி பிரபாகரனை புகழ்ந்து, தனித் தமிழ்நாடு தேவையோ என்னும் என்னத்தை ஏற்படுத்த முயற்சித்ததே அன்றி வேறொன்றும் இல்லை.
ஆனால் இதில் சீமானின் ஒரு கேள்விக்கு மத்திய அரசு பதில் தருமா?
அவரது கேள்வி, ரசாயன ஆயுதம் இருக்கலாம் என்பதற்காக ஈராக்கை அமெரிக்கா போர் புரியலாம் என்றால், இந்திய மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடல் படையை இந்திய அரசு ஏன் எதிர்கவில்லை?

ஒன்று மட்டும் நிச்சயம் இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பும், தேவைபட்டால் இந்திய இலங்கை கடல் படைகளின் கூட்டு முயற்சிகளும் தேவை. சாகுபடியின் பொழுது மட்டும் பேசப்படும் காவேரி பிரச்சனை போல் இல்லாமல், இலங்கை அரசை கண்டித்து அறிக்கைகளும், கழகங்களுக்கு ஒன்றாக கண்டன கூட்டங்களும், இரங்கல் கவிதைகளும் என்று நிற்காது.. இதுவரை இதை அரசியல் ஆதாயங்களுக்கு பயன் படுத்தியது போதும் என்று மாநில அரசும், பிற கட்சிகளும் உருப்படியாக செயல்பட வேண்டும்.

நான் தான் வாழவந்தான்

வணக்கம்,

நான் தான் வாழவந்தான், வருடத்தில் சில மாதங்கள் மட்டும் கர்நாடகத்தின் வெள்ள உபரிநீராக காவிரி பாயும் கோவில் நகரில் பிறந்தவன் நான். 'கெட்டும் பட்டணம் போ' என்பார்கள். ஆக எங்கோ பிறந்து என்ஜீநீரிங் படிக்க என்று இந்த சென்னைக்கு வந்தது, வென்றது, இழந்தவை, உணர்ந்தவை, ரசித்தவை என்றும், சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும், மேலே சொன்னதற்கு நேர்மாறாக நான் சென்னையை கெடுத்தும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது ஏன் பட்டனப்ரவேசம் ஆகியது. வாழவந்தான் பெயர் காரணம் அறிய விரும்பும் அன்பு உள்ளங்களே, நான் மட்டும் இல்ல என்னை போல் இந்த வாழ்கையை வரமாக எண்ணிவாழ்பவர்கள் அனைவரும் வாழ வந்தவர்களே. மேலும் சென்னை நான் வாழவந்த இடம், எனக்கு வாழ்வளித்த இடம் அதனாலும் இந்த பெயர்.