மலர்வளையம்


இந்தியாவின் முதல் கூட்டணி மத்திய அரசை அமைத்து அதன் மூலம் இந்தியாவின் பத்தாவது பிரதமராக பணியாற்றிய,
மிஸ்டர்.கிளீன் எனப் புகழப்பட்ட திரு. விஸ்வனாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இன்று இயற்கை எய்தினார்..
அவரது ஆன்மா சாந்தியடைய பட்டணப்பிரவேசம் பிரார்திக்கிறது

கண்ணீர் அஞ்சலி

மும்பாய் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரிகள்,(கீழே படத்தில்...)

1. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் (சுமார் 80 என்கவுண்டர்கள் மூலம் மும்பையின் நிழலுலகை உலுக்கியவர்)
2.ஹேமந்த் கர்கரே (ஏ.டி.எஸ் தலைவர் - மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களை புலனாய்ந்தவர்)
3. ஏஸிபி அஷோக் காம்தே(இவர் தாத்தா மும்பாயின் முதல் ஐ.ஜி)
இவர்களுக்கும் மேலும் இந்த போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து மனிதருக்கும்(தீவிரவாத நாய்கள் இதல் அடங்கா!!) பட்டணப்பிரவேசத்தின் கண்ணீர் அஞ்சலி

டாக்டர் எத்தனை டாக்டரடி

ஹிதேந்திரன் - இந்த பெயரை தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தால் மூளை சாவை சாந்தித்த 16வயது ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களை அவனது பெற்றோர்(அசோகன், புஷ்பாஞ்சலி - இருவரும் மருத்துவர்கள்) தானம் செய்தனர். இதை தொடருந்து ஏற்பட்ட விழிப்புணர்வால் உடல் உறுப்புக்களை தானம் செய்வது பெருகிவருகிறது. இதற்கு அரசும் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முயற்சிகளை செய்துவருகிறது.
இதை நான் இங்கு குறிப்பிட காரணங்கள் சில.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருதை என்னும் தச்சு தொழிலாளியின் மனைவி சாந்தி என்பவர் மூளைச்சாவை சந்தித்தார், இதை தொடருந்து அவரது 14 வயது மகன் சுரேஷின் தூண்டுதலில் சாந்தியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன(அல்லது வழங்கப்படவுள்ளன). இதன் தொடர்ச்சியாக என் நினைவுக்கு வரும் இரு வேறு சம்பவங்கள்... சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜாராம்-கவிதா தம்பதியர் தமது 5வயது மகன் நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் எனக்கு மாற்று கருத்துகள் உண்டு. நவீனுக்கு முளை செயல்திறன் குறைவே அன்றி மூளைச்சாவு ஏற்படவில்லை. பொருளாதார பிரச்சனைகளுக்கு உறுப்பு தானம் தீர்வாகதே!!. இதை தவிர்த்து நவீனை அரசு அல்லது தனியார் காப்பகங்கள் வளர்க்கலாமே!!!
/// கின்னஸ்(??) திலீபன் பெற்றோருடன்///


/// நவீன் தாய் கவிதாவுடன்////


சம்பவம் இரண்டு...
சென்ற ஆண்டு ஜூன் மாதம் மணப்பாறையை சேர்ந்த டாக்டர் தம்பதி முருகேசன் காந்திமதியின் தவப்புதல்வன் திலீப் என்னும் 15வயது சிறுவன் கின்னஸ் சாதனைக்காக சிஸேரியன் ஆப்பரேஷன் செய்து சர்ச்சைக்குள்ளானது நினைவிறுக்கிறதா??. இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ, சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம். இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை(???) சமீபத்தில் தொடர ஆரம்பித்தனர். இதனால் எத்தனை உயிர்கள் ஊசலாட உள்ளதோ??

கவனிக்க: ஹிதேந்திரன், திலீபன் இருவரின் பெற்றோரும் மருத்துவர்களே!!!

கொசுறு:
இதை பதிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மற்றோரு மருத்துவர் 24 மணி நேரத்தில் 50 ஹிரண்யா ஆப்பரேஷன் செய்ய முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன்..
ஐயா உங்கள் சாதனை சோதனைகளுக்கான விலை மற்றவர் உயிர் அல்ல!!

நிழல் நாயகன்

திரையில் வில்லனாகவும் நிஜவாழ்வில் நாயகனாகவும் வாழ்ந்த திரு. எம். என். நம்பியார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்...
அவரது ஆன்மா சாந்தியடைய பட்டிணப்பிரவேசம் பிரார்த்திக்கிறது!!

என் தோழி... என் காதலி... என் மனைவி...

தமிழோவியம் இணைய இதழில் வெளிவந்ததாக வினையூக்கி வலைப்பதிவில் நான் படித்த இடுகை..
(பட்டணப்பிரவேசத்தின் முதல் காப்பி பேஸ்ட் :-))

அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில், ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன். அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம், நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை, தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி, திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை. நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம், காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான். . மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து "அப்பா, கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா" சொன்னது தான் தாமதம், வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து "ஏண்டி , கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தா,கீழேயா கொட்டுற, திமிருடி உனக்கு" என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது "அம்மு, ஏம்மா குழந்தையை அடிக்கிறே" நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி, மிரண்டு போய் இருந்தது. கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல, இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள். ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம், நேசம், எல்லாம் கிடைத்தது. கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும். ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள், ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள். என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்,ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் "இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல, உன்னையும் கூட்டிட்டுப்போகல, அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே!!" நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச, வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்."பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா?" எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை."தூங்கிட்டு இருக்கா""லஞ்ச் சாப்பிட்டாளா? திரும்ப அடிச்சியா?""சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன், அடிக்கல கார்த்தி" சிறிய மௌனத்திற்குப்பின் "சாரி கார்த்தி" என சொன்னபோது குரல் உடைந்திருந்தது. அழுதிருப்பாள் போலும். இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.அவள் "சாரி." சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்."கார்த்தி, காப்பி போலாமா?" எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது, அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்."பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார், பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்"மோகன் சிரித்தபடி "கார்த்தி, வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான், வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது, நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா, இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா?"மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை."நாம நிறைய சமயங்களில், கோபப்படுவதில்லை, சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம், இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா?""வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்""உன்னோட கோபத்திற்கு காரணம், கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட, ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்""ம்ம்ம்ம்""வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி, உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம், ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்."பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் "எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்""ம்ம்ம்ம் எடுத்துக்கோ"மோகனிடன் விடைபெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர். காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்."என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா." சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே "அப்பா, போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்"நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து, காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன். கண்ணாடியில் கீர்த்தனா "சாரி" சொன்னாள். கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்."கார்த்தி, ரம்யா வீடு வடபழனி தானே,,, நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிற""அம்மு, நாம இப்போ பீச் போறோமாம், பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டா"கண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன "தாங்க்ஸ் அண்ட் மீ டூ " என சொல்லிக் கண்ணடித்தாள், மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன்.

இது ஒரு நிலாக்காலம்

நிலாவில் தடம் பதித்த நம் இஸ்ரோ வல்லுனர்களுக்கு இந்த முறை மலர்க்கொத்து வழங்கப்படுகிறது.
பணத்தை செலவழிக்க வழிதெரியாமலும், கோட்டாக்களின் முறைகேடுகளாலும் சட்டக்கலூரிக்குள் மாணவர் என்ற பெயரில் நுழைந்து வெறித் தாண்டவம் ஆடிய நாட்டின் விஷக்கிருமிகளுக்கு இந்த முறை முள் கிரீடம்.

குழந்தைகள் தின வாழ்த்து!!

வலைப்பதிவு உலகின் கைக்குழந்தை (பதிய ஆரம்பித்து ஒரு மாதமே ஆகியிருப்பதால்) ஆகிய வாழவந்தான் உலகில் உள்ள அனைத்து குழந்தை உள்ளங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!!

இருட்டு அறையில் முரட்டு குத்து

சென்னை சட்டக்கல்லூரி, மன்னிக்க "சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி". இதில் என்ன மன்னிப்பு கேட்க்கும் அளவுக்குனு யோசிக்கவேண்டாம். ஏன்னா, இதே போல ஒரு (விளம்பர)போஸ்டரில் திரு.அம்பேத்கர் அவரது பெயர் விடுபட்டது மாணவர்களிடையே ஜாதி(என்ற பெயரில்) கலவரம் உருவாக காரணமானது.தமிழ் கூறும் நல்லுலகதில் ஏரத்தாழ எல்லாரும் சன் டிவி பார்ப்பதால் இந்த கலவரத்தோட காரணத்தை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சென்னை சட்டக்கல்லூரில கலாட்டாக்க்ள் நடைபெறுவது செமஸ்டர் தேர்வுகள் மாதிரி வருடத்தில் ஓரிரு முரை வந்து போகும் என்றாலும், இந்த முறை 'இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்' என்ற குறிப்போடு ஏதோ தீவிரவதிகளின் படுகொலை கேஸட்டுகளுக்கு இனையான ஒரு வெறித்தாண்டவமாக இருந்தது இந்த கலவரம்.உயிருக்கு பயந்து மரத்தில் தொங்குபவன், அடிவாங்கி மயக்கமானவன் இப்படி யாரையும் விடாம கொலைவெறியோடு தக்குதல். எங்கு பார்த்தாலும் கத்தி, உருட்டுகட்டை, டியூப்லைட் என்று சைஸ் வாரியாக ஆயுதங்களுடன் அலையும் வெறிபிடித்த இரண்டு கால் ஜந்துக்கள்(அவனுங்களை நாய், நரி-நு சொன்னா அது அந்த மிருகங்களை கேவலபடுத்துவதாகும்). இவனுங்க எல்லாம் எதிர்காலத்துல கோர்ட்டுக்கு போய் என்னதை சாதிக்கப்போரானுங்கனு தெரியல. இப்ப எல்லாம் கோர்ட் வளாகத்துல கொலை நடக்குது இந்த மாதிரி ஆளுங்க வக்கீலானா கோர்ட் உள்ள கொலை நடக்கும். அதை நீதிபதியும் நீதி தேவதையும் ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி பார்க்கவேண்டியதுதான். போலீஸ் பத்தி கேக்கவேண்டாம், அவங்க இப்பவே வேடிக்கை தான் பார்த்தாங்க. பாவம், போலீசையும் குறை சொல்ல முடியாது, அரசியல் தலையீடு, விசாரணை கமிஷன், மனித உரிமை இதெல்லாம் தாண்டி தான் கடமையை செய்யனும். அப்படியே வேலை செய்ஞ்சாலும் மேல சொன்ன விஷயத்துல ஏதாவது ஒண்ணு அவங்க வேலையை பறித்திடும், அதுக்கு சும்மா இருந்துட்டு சஸ்பென்ஷன் வாங்கிட்டு, சம்பளத்தோட கொஞ்ச நாள் லீவும் எடுத்துட்டு வேலைக்கு வந்துடலாம்.
மொத்தத்தில் அரசியல் ஆதயங்களுக்காக லோக்கல் ரௌடிகளின் பயிற்சிகூடமாக இயங்கிவரும் சட்டக்கலூரியின் ஒரு செய்முறை பயிற்சியே இந்த கலவரம். இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறுகிரார்களோ இல்லையோ, அளுக்கொரு கொலை அல்லது அதற்கு இணையான கிரிமினல் கேசுடன் வெளியேறுவார்கள்(வாதிடும் வழக்கறிஞராக அல்ல குற்றம் செய்தவர்களாக)

பின் குறிப்பு: சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள், அந்த சட்டதை படிக்கிறேன் என்ற பெயரில் சில மிருகங்கள் செய்த வெறிச்செயலை பற்றி பகிர்ந்துகொண்டதால் இந்த(இருட்டு அறையில் முரட்டு குத்து) தலைப்பு. இதை வேறு ஏதேனும் காரணத்திற்காக தேடிவந்த்திருந்தால் அதற்கு வாழவந்தவனோ அல்லது பட்டணப்பிரவேசமோ பொருப்பல்ல!!!

சங்க இலக்கியத்தால் சீரழியும் தமிழினம்

சமீபத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாரிசான கனிமொழி அவர்கள் 'தேவாரம் திருவாசகம் என கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிரார்கள்' என்னும் கருத்தை கூறியுள்ளார். இது கலைஞரின் வழியில் நாத்திகம் என்ற பேரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதே ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:தேவாரம் திருவாசகம் போன்ற நூல்கள் கடைச்சங்கத்தின் பக்தி இலக்கியத்தை சேர்ந்தவை.கனிமொழி அவர்கள் இப்ப சமீபத்தில் சென்னை சங்கமம் என்ற ஒரு கிராமிய கலைவிழா நடதினாங்க. இதற்கு காரணம் கிராமிய கலை வளரனும், தமிழ் மக்கள் எல்லாருக்கும் கலை ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்தனும்னாங்க.இதே மாதிரி சங்க காலத்துலயே, தமிழ் நாட்டுல சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தான் கடவுள் வழிபாடு இருந்துது. அந்த மாதிரி காலகட்டத்துல இறைவன் எல்லார்க்கும் பொது, இறைவனை அடைய மொழி ஒரு தடையா இருக்க கூடாதென்றும், பக்தியின் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்த நூல்கள் அவை. தேவாரம், திருவாசகம் இதையெல்லாம் வாழ்க்கைல ஒருமுரையாவது ஒழுங்கா படிச்சு இல்ல பொருள் விளங்க எங்கயாவது கேட்டு தெரிஞ்சுகிடிருந்த இந்த மதிரி ஒரு எம்.பி பேசமாடாங்க.கனிமொழி சொல்றதை பார்த்தா சங்க இலகியங்கள் தான் தமிழன் வாழ்கையை வீணாகியதா??

என்(ன) அவசரம்

நான் வணக்கத்துடன் சொன்னது போல காவிரி பாயும்/பாய்ந்த(இப்பயுமா பாயுது??) கோவில் நகரத்து மகாமக குளக்கரையில ஒரு தனியார் ஆஸ்பத்திரில தான் இவன் ஜனனம். என்னோட அப்பா அம்மாவின் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் விஷயங்கள் எல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சதால் அதுல என் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடவேண்டாம்.. தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்துல மாப்பிளையின் அக்கா மகளை என் அப்பாவுக்கு புடிச்சுபோக நல்லபடியா பெண் கொடுத்து பெண் எடுத்து முடிந்தது. இப்படியாக காவேரியுடன் சங்கீதமும் பாய்ஞ்சுகிட்டிருந்த ஊர்ல, சங்கீதம் படிச்சுட்டு தன் பாட்டுக்கு தனியா பாடிட்டிருந்த பொண்ணு(என் அம்மாதான்!!) கிளார்க்(எங்க அய்யன்) பாட்டுக்கு எசபாட்டு பாட ஆரம்பிச்சாங்க.
ஆனா பாருங்க, அந்த தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் இல்ல. அஸ்வமேத யாகமெல்லாம் பண்ணலையின்னாலும் எக்கசக்கமா கோவில் குளத்தை சுத்தி, அப்பறம் தலைசுத்தி அந்த பாட்டு டீச்சர் மூனாவது முறையா கருத்தரிச்சாங்க. ஏற்கனவே ரெண்டு முறை குழந்தைகள் தவறியதால ரொம்பவே கலக்கத்துல இருந்தாங்க அந்த தம்பதி. இதுக்கெல்லாம் நடுவுல வேலைக்கு வேற போய்வந்து அந்த அம்மா கொஞ்சம் சிரமப்பட்டுகிட்டிருந்ததை பொருத்துக்க முடியாத கடவுள், அந்த குட்டி பாப்பாக்கு சுமார் ஒரு 50நாள் முன்னாடியே(8 1/4 மாசத்துல) உலகத்தை பார்க்க பெர்மிட் குடுத்துட்டாரு. இப்படியாக ரெண்டுச்சாமியா(நன்றி: சாமி திரைப்படம்), அம்மாவ கஷ்டப்படுத்த கூடாதுனு அவசர அவசரமா பொறந்தேன். இவ்ளோ அவசர அவசரமா பொறந்ததாலோ என்னவோ அதன் பிறகு இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாமே கொஞ்ச்ம் ....ஸ்ஸ்ஸுலோ. அடுத்ததா அந்த அவசரகுடுக்கையை உயிர் பொழைக்க வைக்க என்னென்ன பாடுபட்டாங்கனு பார்ப்போம்......

என் கதை

இந்த தலைப்பில் வரும் பதிவுகள் நான் வாழ்க்கையில் மறக்க மறந்தவை. என் டைரியின் பக்கங்களுடன், அதில் சொல்ல மறந்தவைகளும்.

இது தேவையா???

6 சாமி!!!!
இது ஒன்னும் சாமி படத்துல வர விக்ரம் பேரு இல்ல.
போன மாசத்துல மட்டும் சேலம் அரசு ஆஸ்பத்திரில அனாதையா விடப்பட்ட கைக்குழந்தை (infant)களின் எண்ணிக்கை!!
இது ஒரு ஆஸ்பத்திரில ஒரு மாசத்துல தெய்வக்குழந்தை ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைனா, சராசரியா தமிழ்நாட்டுல மட்டும் ஒரு மாசத்துல இந்த மாதிரி விடப்பட்ட குழந்தைகள் எவளவோ??.
இந்த செய்தி டிவில வந்தபோது அது பத்தி பேசின ஒரு சமூக ஆர்வலர் சொன்னதை கவனிக்க வேண்டும். இந்த மாதிரி குழந்தைகள் தவறான தொடர்புகளாலும்(பெரும்பாலானவை), குடும்பத்துல இருக்கும் வருமையாலும் கைவிடப்படுகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம், ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்னும் போது ஏன் பெற்றெடுத்து அனாதையாக்கனும். அதுவும் இப்ப எவ்வளவோ கருத்தடை சாதனங்கள் கிடைக்குது, இருந்தும் ஏன் இந்த நிலைமை. இதுக்கு காரணம் மக்களின் அறியாமையும், பொருமையின்மையும் தான். பொருமையின்மை பத்தி இங்க இன்னும் விரிவா எடுத்து சொன்னா, பதிவின் பின்புல கலர்ல இருகும்கிறதால அதை தவிர்க்கிறேன். ஆனா மக்களின் அறியாமைக்கு முறையான செக்ஸ் கல்வி இல்லாதது தான்.
முறை அற்ற உரவுகளுக்கு அடித்தளம் பள்ளிக் காலத்துலையே ஆரம்பமாகுது. இது கலாச்சார சீர்கேடா? இல்ல இந்த கேள்வி தனி மனித சுதந்திரத்த பாதிக்கு
தா?. இந்த விவகாரத்தை ரொம்ப விவாதிக்க வேண்டாம். ஆனா இந்த மாதிரி(அனாதையாக்கப்படுதல்) பிரச்சனைகளின் ஆரம்பம் பள்ளிகளா இருக்கும்போது அதை தவிர்க்க முறையான செக்ஸ் கல்வியும் அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இதுல தனி மனித சுதந்திரத்தை பத்தி நான் குறிப்பிட காரணம், செக்ஸ் என்பது இருவர் சம்பந்தபட்ட விஷயமா இருக்கும்போது அதன் விளைவுகள் முனாவதா அதுவும் ஒரு குழந்தையையும் இந்த சமூகத்தையும் பாதிக்ககூடாது.

வாழவந்தான் வழிகாட்டுகிறான்


எங்க ஏரியா

எப்படி இருந்த நான்...


இப்படி ஆயிட்டேன்!!!