வாழ்த்து

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.. இந்த போகியின் புகையோடு தீயவை கரைந்து மகிழ்ச்சி பொங்கட்டும்


------------------------------------------------------------------------------------------------
இந்த போகியோட நான் மாற்ற நினைப்பது ஆபீஸ்க்கு லேட்டா போகுறத..
பாப்போம்.. என்ன நடக்குதுன்னு



பணையம்

      வணக்கம், சரியாக 7 மாதங்களுக்கு பிறகு என் வலைப்பிரவேசம். அப்படி இப்படின்னு சில பிரச்சனைகளை தாண்டி வர இந்த நேரம் தேவைப்பட்டது. இத்தனை நாளாக இவன் எதாவது எழுதுவான்னும், எழுதினா பார்த்துக்கலாமுன்னு இருந்தவங்களுக்கும் நன்றி.
இந்த பதிவு நான் சமீபத்துல ஊர் சுத்தினது பத்தி தான்.(நன்றி: SJ Surya அவருதான் டைட்டில் போடும்போதே கதையே சொல்றாருல்ல).


      ஏதோ எம்பாட்டுக்கு இந்த ரிசஷன்லையும் தாக்கு புடிச்சு வேலைக்கு போய் ஆபீசையே சுத்திவந்த நான், இப்படியே போனா வாழ்க்கைல உயர முடியாதுன்னு டிச 31 ஆம் தேதி முடிவு பண்ணினேன். அதனால பொறக்குற வருஷத்துலயாவது ஒரு உயர்ந்த நிலைய அடையனுமுனு ஊட்டி போலாமுன்னு நெனச்சேன். நம்ம பர்ஸ் வீகதுக்கு கோத்தகிரி பெண்டு கூட தாண்டதுன்னு தெரிஞ்சதால ஏழைகளின் ஊட்டிக்கு போலாமுன்னு முடிவாச்சு.31 ஆம் தேதி ராவோட ராவா புதுவருஷத்துக்கு ராவா கூட அடிக்காம ஒரு கடத்தல் வண்டிய(அதாங்க omni) புனியவான் ஒருத்தர் கிட்ட உஷார் பண்ணியாச்சு. அப்படி இப்படி மயக்க பொடி தூவி ஒரு 6 நண்பர்களையும் சேர்த்தாச்சு.நான் சைக்குளுக்கு ஸ்டாண்டு கூட போடத்தெரியாம சுத்தின காலத்துலேயே டிவிஎஸ்50 ஓட்டுன எங்க பாஸ்-தான் இந்த ஊர்சுத்தி பொழப்புக்கு சாரதீ(spelling mistake அல்ல ஒரு fire இருந்தா நல்லாயிருக்கும்னு).


      எனக்கு குளிக்கிற தண்ணில கண்டம்னு சிவகாமி கம்ப்யுட்டர் சொல்லிருக்குன்னு ஊற நம்பவெச்சிருந்தாலும், குளிச்சுட்டு வரலைனா boating போகும்போது ஏரில தள்ளிவிடப்படுவேணு அன்பா சொன்னதால இரவு(?) 5 மணிக்கெல்லாம் குளிச்சு கெளம்பியாச்சு. போன முறை ஏலகிரி போனபோதே ஸ்ரீபெரும்புதூர் பய்பாசுல ஒரு INDIANA COFFE SHOP கண்டுபுடிச்சிருந்தோம் அவனுக்கு புது வருஷத்துல ஒரு தொழில் வைப்பா இருக்கட்டுமேனு அங்க ரதத்த பார்க் பண்ணிட்டு dress போடாத டீ, சில வடைகள சாப்டு கிளம்பினோம்.(ஆமா சாமி! INDIANA COFFEE SHOP டீக்கட தானுங்கோ). நம்ம ஊருல highways -ல புளியமரத்தவிட அதிகமா ஒன்னு இருக்கு, அதான் toll கேட்ஸ். ஒரு toll gate -ல இருந்து ஸ்டாட் பண்ணி 3 கீர் வரதுக்குள்ள அடுத்த toll gate வந்துருது. இந்த டூர்ல வாங்கின toll bills வெச்சு ஒரு கொயர்ல ஒன் சைட் நோட்டு தைக்கலாம். toll gate கு அடுத்து அதிகமா இருக்குறது fly over. ஒரு ரோலர் கோஸ்டர் effect தான். ஒருமாதிரி 10 மணிபோல வேலூர் தாண்டி ஒரு restaurant க்கு சாப்ட போனா உள்ள நொழையும் போதே எங்க பாஸ் வண்டிய பார்கிங்ல perfect -ஆ நிறுத்தறேன்னு பக்கத்துல இருந்த மார்பிள லேசா டிச்சு பண்ணிட்டாரு, அது ஏதோ லோக்கல் duplicate கல்லுபோல டிச்சு பன்னதுக்கே ஒடஞ்சிடுச்சு. நல்லவேளையா யாரும் பாக்குறதுக்குள்ள அவசர அவசரமா சாப்டு வந்து பாத்தா எங்களுக்கு பக்கத்துல பார்க் பண்ணினவன் எங்கள விட பெருசா டிச்சு பண்ணி வெச்சிருந்தான். ஆனா இந்த அவசரத்துல restaurant -ல இருந்த சில பொம்மைகளை கூட சரியா பாக்கமுடில.[ பொம்மைனா figure. இவளோ அழகா பொண்ணுங்கள பெத்தாங்களா செஞ்சாங்களான்னு ஒரு doubt இருக்குறதால இந்த பேரு]


      ஒரு வழியா ஏற்காடு அடிவாரத்துக்கு வந்தாச்சு, வயத்துல மணியும் அடிச்சாச்சு. மலைக்கு மேல கிழக்கு மேற்க்கே தெரியாதே இதுல எங்க நல்ல restaurant கண்டுபுடிக்கனு யோசிச்சப்ப, பாஸுக்கு 'நாகம்மா' காலிங்(அட நாகம்மானா மாமியார்பா).எங்க பாஸோட பைனான்ஸ் அம்மா(பைனான்ச்னா கட்டிக்க போற பொண்ணு). என்னடா மலை, மேகம்னாங்க நம்மூரு மாறியே வேற்குதேனு கீழ இருந்த கடக்காரர்ட கேட்டா, ஒரு 5km போங்க குளிருல ஓரஞ்சிருவீங்கனாறு. நாங்களும் ஒரு 30km ரிங்க ரிங்கா ரோசச்னு 20hair pin bend லாம் தாண்டியும் மெரினாவுல அடிக்கிற காத்து மாதிரிதான் இருந்தது. அப்பத்தான் தெரிஞ்சுது அந்த பயபுள்ள சொன்னது ரோட்ல 5km இல்ல ராக்கெட்டு மாதிரி நெட்டுக்குத்தலா 5km போனான்னு.பாவி கொஞ்சம் பேரம் பேசினதுக்கு இப்பிடி கோத்து வுட்டுடிச்சு.நாகம்மா guidance -ல ஒரு நல்ல restaurant சாப்டு முடிச்சாச்சு. இவங்களுக்கு எப்படிடா இவ்ளோ விஷயம் தெரிஞ்சுதுன்னு விசாரிச்சப்பத்தான் பூனைக்குட்டி வெளில வந்துது(அதாவது உண்மை தெரிஞ்சிச்சு). நாகாமா பேருல அங்க ஒரு எஸ்டேட் இருக்குதான்.[பாஸுக்கு எப்டியோ, நான் honey moon வாறதுக்கு ஒரு எடம் கெடச்சிடுச்சு]. இனி நாங்க தங்க தான் ஒரு palace கண்டுபுடிக்கணும்...
(தொடரும்...)
[பொதுவா ஊர் சுத்தினதா பயண கட்டுரை தான் எழுதுவாங்க, ஆனா நான் இத பதியாட்டி எனக்கு பொண்ணு தரவர வீட்டார்கிட்டலாம் என்னபத்தி ரொம்ப நல்லவிதமா சொல்லுவோம்னு பயமுடுத்தினதால் என் மணவாழ்கைய பணையம் வெச்சு எழுதறேன். அதனால இது பணைய கட்டுரை. இது நல்லா இருக்கு இல்லைன்னு comment -டி எனக்கு தாலி பாக்கியம் அருளுங்க சாமியோவ்!]

தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...

திரு டி. டி. சக்கரவர்த்தி இந்தியாவின் கண்பார்வையற்ற முதலாவது நீதிபதி ஆவார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள திமிரி என்ற ஊரைச் சேர்ந்த இவர் தன் நான்கு வயதில் அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார். வழக்குரைஞர் பட்டம் பெற்ற இவர் துவக்கத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி பெற்றார்.
பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். தமிழக அரசின் மாவட்ட நீதிபதிப் பயிற்சிக்கு தேர்வு பெற்றார்.2008ல் நடந்த தமிழக அரசின் தேர்வாணைய நீதிபதிகள் தேர்வுக்கான தேர்வில் 13-வது இடம் பெற்றார். தமிழ்நாடு மாவட்ட ஜூடிசியல் அகாடமியில் 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். வால்பாறை நீதிமன்றத்திலும் பயிற்சி நீதிபதியாக இருந்தார். தனது 41 ஆம் வயதில் ஜூன் 2009 இல் கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் சக்கரவர்த்தி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நன்றி: விக்கிபீடியா மற்றும் தி ஹிந்து

தந்தை மகனுக்காற்றும் உதவி

திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளின்படி ஆளுநர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் இனி பொது நிர்வாகம், மாவட்ட வருவாய், தொழில்துறை, சிறுபான்மையினர் மற்றும் சமூக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளையும் சேர்த்து கவனித்துகொள்வார்.தமிழகத்தின் முதல் துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்!!!

மலர்வளையம்


LTTE தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் இலங்கை படையினரால் கொல்லப்பட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இனியாவது இலங்கையில் அமைதி திரும்பட்டும்.

இதிலும் குழந்தைகளா?

அமீர் கசவ்(எ)அஜ்மல் கசப்! இந்த பேரை இந்திய மக்கள் அவளவு சீக்கிரம் மறக்க வாய்ப்பில்லை. நவ 26 2008, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன். சுமார் 200 உயிர்களை பலிகொண்ட கொலைவெறி தாக்குதல் முடிந்து 5 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் இவன் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு கொண்டே செல்லப்படுகிறதே அன்றி தீர்ப்பு வழங்கபோவதற்கான அறிகுறியில்லை. இந்நிலையில் இதில் புதிதாக ஒரு குழப்பம், கசப் சிறுவனென்றும் அவனை சிறுவர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

நான் தெரியாமத்தான் கேக்குறேன் கள்ள தோணி வழியா நாட்டுகுள்ள ஊடுருவி 3 நாள் ராணுவத்துக்கே தண்ணி காட்டி, 200 உயிர்களை கொன்ற அரக்கன் குழந்தையா? சரி சிறுவன்னு வெச்சிக்கலாமுனாலும் அவனிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசரனைபடி அந்த கம்முனாட்டியின் வயது 21, ராணுவத்தையே திண்டாட வெச்சவன் போலீசுக்கு பயந்து(?) ரெண்டு வயசு கூட சொல்லியுருந்தா கூட 18 வயசா இருக்கலாம். நம்ம நாட்டுல சிறுவர்கள்னா 14 வயசுக்கு கீழ் உள்ளவர்கள்தான். இப்படி இருக்க இவன் சிறுவனானு எலும்ப சோதிக்கணும், நரம்ப சோதிக்கனும்னு நேரத்தை கடத்தாம அந்த பரதேசி எலும்ப எண்ணீயிருக்கவேனாம்.

இதை விட்டுட்டு 5 மாசமா ஒரு தீவிரவாதிக்கு நூத்து கணக்குல போலீசு பாதுகாப்புக்கு, அவனுக்கு வாதாட ஒரு வக்கீல் அவங்கள அது சரியில்லை இது சரியில்லைனு மாத்துறது, பேப்பர் படிக்கலாமா கூடாதான்னு ஒரு கேசு அதுல அவன் புத்தகங்கள் மட்டும் படிக்கலாமுன்னு தீர்ப்பு, அந்த நாதாரி சத்திய சோதனை படிச்சு காந்தியா மாறப்போறானா? இத இப்படியே விட்டா என்ன ஆகும் பாராளுமன்ற தாக்குதல் நடத்துனவங்களுக்கே தண்டனைய நிறுத்தி வெக்கிற நம்ம நாட்டுல கசப் சின்ன குழந்தை, சுட்டா செத்துருவாங்கனு தெரியாம செஞ்சுட்டான், 100 கோடில 200 பேர்தானே கொன்னான்(அவங்களா இவன் சுடும் போது குறுக்க வந்து செத்துட்டாங்க)அதனால இவனை மன்னிச்சு விடுதலை பண்ணி இந்தியா மனிதநேயத்துல புடுங்கிடிச்சுனு சொல்லிக்கலாம்பாங்க.

இதெல்லாம் பார்க்க வேண்டாமுன்னுதான் ஓம்ப்லே மாதிரி உண்மையான தேசபற்றுள்ளவரு இறைவன் கிட்ட போய்ட்டாரு. அவரு உயிரை குடுத்து புடிச்சா இங்க நாம மயி..!! மயிலிரகால அவன தடவி குடுக்குறோம். ரத்த காட்டேரிக்கு அடிபட்டா மயிலிறகால் வருட தேவையில்லை!. தண்டனைகள் கடுமையானால் மட்டுமே தவறுகள் தவிர்க்கப்படும்!! இந்திய இறையாண்மை மேடை பேச்சுகளால் மட்டும் கெடாது இது போன்ற தவறான முண்ணுதாரனங்களாலும் தான்!!!

இலங்கை போரின் தீவிரம் குறைப்பு(போர் நிறுத்தம் அல்ல)[ஈழமும் இந்திய அரசியலும் பகுதி 3]

பகுதி 1, பகுதி 2 , தொடர்புடைய இலங்கை ராணுவ தளத்தின் சுட்டி
இலங்கையில் விடுதலைபுலிகளுக்கு எதிரான போரின் தீவிரத்தை குறைத்து வான் வழி மற்றும் கனரக ஆயுத போரை நிறுத்திவைப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. எனினும் LTTE வசம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தரைப்படை தொடர்ந்து ஈடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையை போர் நிறுத்தமாக தவறாக கருதவேண்டாம் என்றும் கூறியுள்ளது. இதற்குள் இங்கு திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் தமிழக முதல்வர் திரு.கருணாநிதி. பின்னர் இந்த அறிவிப்பையடுத்து சில மணிநேரங்களில் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

இந்த செய்தி இன்று தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட விதம் அருமையானது. அவற்றில் இருந்து சில..
1) இலங்கையில் போர் முடிவுக்குவந்தது. இலங்கையரசு போரை நிறுத்துவதாக அறிவிப்பு.
2) கலைஞரின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து இலங்கை அரசு போரை நிறுத்துவதாக அறிவிப்பு.
3) ஐ.நா, மற்றும் உலக நாடுகளின் வலியுறுத்தலுக்கு பணியாத இலங்கை அரசு தமிழக முதல்வர் கலைஞரின் உண்ணாவிரத போராட்டத்தால் போரை நிறுத்த அறிவித்துள்ளது.

இது காக்கா உக்கார பழம் விழுந்த கதை கூட இல்ல, காக்கா எங்கயோ மேல பறக்க கீழ ஆலமரம் வேரோட சாஞ்ச கதை. தமிழ் கூறும் நல்லுலகம் தசாவதாரம்(கமல் திரைப்படம்[இதை இங்க சொல்லாம விட்டா பச்சை நிற வலைபூவுக்கு காவி ஏறிடிச்சுனுவாங்க] புண்ணியத்துல பட்டர்ப்ளை எபக்டு பற்றி தெரிஞ்சுக்கிடிருபீங்க அது மாதிரி இது கழக மீடியா எபக்டு. சாட்டிலைட்டு சானலுல அரைமணிநேரம் நிகழ்ச்சி வழங்குற லேகிய மருத்துவரே வாய்க்கு வந்ததை அள்ளிவிடும்போது, அந்த சானல் குழுமத்தையே(குடும்பத்தை அல்ல)சொந்தமா வெச்சிருந்தா என்ன எல்லாம் சொல்லலாம்? என்ன சொல்லலாம் இந்த மாதிரி பூசணிக்கா தோட்டத்தையே ஒரு சோத்து பருக்கையில மரச்சிடலாம்.

நீ தமிழின துரோகி, உனக்கு தமிழ் ரத்தமே ஓடல, 85 வயது முதியவரின் அறப்போரை கேலிசெய்யும் பாசிச கோமாளி இப்படியெல்லாம் என்ன திட்டி முடிஞ்சதும் இந்த பாசிச கம்முனாட்டிக்கு சில விஷயம் புரியலை அதை யாரவது பின்னூட்டத்துல விளக்குங்க.
1. செப் 2008 இல் இருந்து பலகட்டங்களா பேரணி, மனித சங்கிலி, அறிக்கை, இரங்கல் கவிதை, ராஜினாமா கடித சேகரிப்பு(சேகரிப்பு-னு குறிப்பிட காரணம் இன்று வரை ஒரு வார்டு கவுன்சிலர் கூட ராஜினாமா பண்ணலை) புள்ளிவிவரம், தீக்குளிப்பு, உண்ணாவிரதம்னு வெரைட்டியா ஸ்டண்டு அடிச்சு இன்ன்னிக்கு இலங்கை அரசா பார்த்து இதுக்கு மேல அங்க அழிக்க ஒண்ணுமில்லைனு ஒஞ்சதுக்கு பின்னாடி என்னாலதான் நின்னுச்சுனு டிவில போட்டுகிட்டா இது அயோக்கியத்தனமா இல்லையா?
2. இந்த செயலை ஒரு நாளைக்கு 70 பேர்னு 8 மாசத்துல சுமார் 15,000 மேற்பட்ட உயிர்கள் போகுறதுக்கு முன்னாடியே ஏன் செய்யலை?
3. 95% LTTE வசமிருந்த பகுதிகளை புடிச்சாச்சு மீதி கொஞ்ச நஞ்ச எடத்துக்கு தரைல ராணுவத்தை முன்னேரசொல்லிட்டு அவங்க தலைலேயே குண்ட போடவேன்னாமேனு இலங்கை ராணுவம் மல்லாக்கா படுத்து துப்பினா மாருல படும்னு சொல்ற கதையா போர் நடவடிக்கையின் தீவிரத்தை குறைச்சா இங்க என்னடானா போரே முடிஞ்சிடுச்சு வெற்றி வெற்றின்னு கூவ ஆரம்பிச்சாச்சு. இது முறையான செய்தி சேகரிப்பு மற்றும் ஒளிபரப்பா இல்லை ஓட்டுபொறுக்கும் நாடகமா.?

என்னடா இவன் இலங்கை பிரச்சனைல தலைவரு மட்டும் நாடமாடுற மாதிரியே சொல்லுரான்னேன்னு பாக்குறீங்களா? தங்க தாரகையை பத்திதான் ஊருக்கே தெரியுமே, மாச ஆரம்பத்துல போருனா பொதுமக்கள் சாவங்கனு சொல்லுவாங்க, தேர்தல் நெருங்கினா தனிஈழம் தான் தீர்வுன்னு சொல்லுவாங்க, அப்பறம் அதை தனிஈழம் இல்லை தமிழ் ஈழம்னுதான் சொன்னேன்னு மாத்துவாங்க, ரெண்டு சீட்டு கூடுதலா ஜெயிக்குற மாதிரி தெரிஞ்சா 'நான் குருவாயூர் கோவிலுக்கு குடுத்த யானையை கூட்டிவந்து ராமர் பாலத்துல இன்னும் கொஞ்சம் மன்னகொட்டி அப்படியே எல்லாரும் இலங்கைக்கு போய் தமிழர்களை காப்பாத்தலாமுன்னு' கூட சொல்வாங்க. ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து தமிழின காவலர கொண்டாபட்ட கலைஞரும் இலங்கை பிரச்னையை சினிமா நடிகை மாதிரி தேர்தல் பிரச்சார/ஒட்டு வேட்டைக்கு பயன்படுத்துறது ரொம்ப கேவலம்பா. எப்படியோ இனி இலங்கையில் சிறிது காலம் ஓரளவு அமைதி திரும்பும், உயிர் பலி குறையும். அரசியல்வியாதிகள் விரைவாக மாற்று ஒட்டு வேட்டையை தேடிக்கொள்க!!