இருட்டு அறையில் முரட்டு குத்து

சென்னை சட்டக்கல்லூரி, மன்னிக்க "சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி". இதில் என்ன மன்னிப்பு கேட்க்கும் அளவுக்குனு யோசிக்கவேண்டாம். ஏன்னா, இதே போல ஒரு (விளம்பர)போஸ்டரில் திரு.அம்பேத்கர் அவரது பெயர் விடுபட்டது மாணவர்களிடையே ஜாதி(என்ற பெயரில்) கலவரம் உருவாக காரணமானது.தமிழ் கூறும் நல்லுலகதில் ஏரத்தாழ எல்லாரும் சன் டிவி பார்ப்பதால் இந்த கலவரத்தோட காரணத்தை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சென்னை சட்டக்கல்லூரில கலாட்டாக்க்ள் நடைபெறுவது செமஸ்டர் தேர்வுகள் மாதிரி வருடத்தில் ஓரிரு முரை வந்து போகும் என்றாலும், இந்த முறை 'இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்' என்ற குறிப்போடு ஏதோ தீவிரவதிகளின் படுகொலை கேஸட்டுகளுக்கு இனையான ஒரு வெறித்தாண்டவமாக இருந்தது இந்த கலவரம்.உயிருக்கு பயந்து மரத்தில் தொங்குபவன், அடிவாங்கி மயக்கமானவன் இப்படி யாரையும் விடாம கொலைவெறியோடு தக்குதல். எங்கு பார்த்தாலும் கத்தி, உருட்டுகட்டை, டியூப்லைட் என்று சைஸ் வாரியாக ஆயுதங்களுடன் அலையும் வெறிபிடித்த இரண்டு கால் ஜந்துக்கள்(அவனுங்களை நாய், நரி-நு சொன்னா அது அந்த மிருகங்களை கேவலபடுத்துவதாகும்). இவனுங்க எல்லாம் எதிர்காலத்துல கோர்ட்டுக்கு போய் என்னதை சாதிக்கப்போரானுங்கனு தெரியல. இப்ப எல்லாம் கோர்ட் வளாகத்துல கொலை நடக்குது இந்த மாதிரி ஆளுங்க வக்கீலானா கோர்ட் உள்ள கொலை நடக்கும். அதை நீதிபதியும் நீதி தேவதையும் ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி பார்க்கவேண்டியதுதான். போலீஸ் பத்தி கேக்கவேண்டாம், அவங்க இப்பவே வேடிக்கை தான் பார்த்தாங்க. பாவம், போலீசையும் குறை சொல்ல முடியாது, அரசியல் தலையீடு, விசாரணை கமிஷன், மனித உரிமை இதெல்லாம் தாண்டி தான் கடமையை செய்யனும். அப்படியே வேலை செய்ஞ்சாலும் மேல சொன்ன விஷயத்துல ஏதாவது ஒண்ணு அவங்க வேலையை பறித்திடும், அதுக்கு சும்மா இருந்துட்டு சஸ்பென்ஷன் வாங்கிட்டு, சம்பளத்தோட கொஞ்ச நாள் லீவும் எடுத்துட்டு வேலைக்கு வந்துடலாம்.
மொத்தத்தில் அரசியல் ஆதயங்களுக்காக லோக்கல் ரௌடிகளின் பயிற்சிகூடமாக இயங்கிவரும் சட்டக்கலூரியின் ஒரு செய்முறை பயிற்சியே இந்த கலவரம். இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறுகிரார்களோ இல்லையோ, அளுக்கொரு கொலை அல்லது அதற்கு இணையான கிரிமினல் கேசுடன் வெளியேறுவார்கள்(வாதிடும் வழக்கறிஞராக அல்ல குற்றம் செய்தவர்களாக)

பின் குறிப்பு: சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள், அந்த சட்டதை படிக்கிறேன் என்ற பெயரில் சில மிருகங்கள் செய்த வெறிச்செயலை பற்றி பகிர்ந்துகொண்டதால் இந்த(இருட்டு அறையில் முரட்டு குத்து) தலைப்பு. இதை வேறு ஏதேனும் காரணத்திற்காக தேடிவந்த்திருந்தால் அதற்கு வாழவந்தவனோ அல்லது பட்டணப்பிரவேசமோ பொருப்பல்ல!!!

0 comments: