முள்ளை முள்ளால் எடுக்கின்றோம்

அக் ௨0 2008 ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் அமைப்பினர் மும்பையில் ரயில்வே கமிஷன் தேர்வு எழுத வந்திருந்த வடநாட்டவர்(குறிப்பாக உபி மற்றும் பீகார்) மீது தாக்குதல் நடத்தினர். இவர்கள் வினா தாள்களை கிழித்தும், கல்வீச்சு நடத்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் பவன் என்ற பீகார் வாலிபர் பலியானார். உலகமயமாக்கலால் எல்லைகள் விரிவடைந்துவரும் இந்த நாட்களில் ஒரு நாட்டின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியில் அரசாங்க வேலை வேண்டிநிற்பது தவறாக கருதபடுகிறது. நவநிர்மான் அமைப்பினர் இதற்கு சொல்லும் காரணம் வெளிமாநிலதவரால் இவர்கள் வேலைபரிபோகிறது என்பதாகும். இத்தனைக்கும் ரயில்வே துறை பல பிரிவுகளாக செயல் பட்டாலும் மத்திய அரசின் கட்டுபாட்டில் வரும் ஒரு இந்திய நிறுவனமே.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பீகார் சென்றதும் பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடினர். நவநிர்மான் அமைப்பினர் சொல்லும் காரணம் நியமாக இருந்தாலும்(அப்படிஎன்றால் மகாராஷ்டிராவிலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலை தேடி வருவோரையும், தொழில் செய்பவர்களையும் மகாராஷ்டிரவிற்கே துரத்த வேண்டுமா??) அதற்கு ஒரு விவசாயி மகனின் உயிர் விலை அல்ல. அதேபோல் இதை எதிர்க்க பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடியதும் கண்டிகவேண்டியதே.
இதை தொடருந்து ராஜ் தாகரே கைது செய்வதில் தாமதம் இருந்தாலும் அந்த நடவடிக்கை பாராட்ட வேண்டியதே.
குறிப்பு: ராஜ் தாகரேயின் செயலை கண்டித்துள்ள சிவசேனா அயிந்து ஆண்டுகளுக்கு முன் இதே காரணதிற்காக ரயில்வே தேர்வு துறை அலுவலகத்தை சேதப்படுத்தி அதன் சேர்மன்-ஐ தாக்கியது நமக்கு மறந்திருக்கலாம்.
எது எப்படியோ நாம் அனைவரும் நல்ல முறையில் மொழி, இனம், மாநிலம் என்ற பற்றுதலில் (அல்லது அரசியல் போர்வையில்) இந்தியர் என்பதை மறந்து மாநிலதிர்கொரு இந்தியாவாக பிரிந்தாலும் ஆச்சரியமில்லை.

0 comments: