பட்ட கல்லில் படும்

நேற்று இரவு ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தேன். வானிலை அறிக்கை உண்மை என்பது போல மழை கொட்டத தொடங்கியது. ரோட்டை பிறிக்க சென்னை போக்குவரத்து காவலால் போடப்பட்ட கற்கள் மூழ்க ஆரம்பித்தன. அப்போது அந்த வழி வந்த சென்னை சாலைகளின் செல்லப்பிள்ளை(ஆட்டோ) முன்னால் சென்ற இன்னொரு பிள்ளையை முந்தப்பார்து மூழ்கிய கற்களில் மோதி ஒரு கல்லை உடைத்ததோடு தன் ஒரு காலையும் இழந்து நொண்டியபடியே சென்றது. அடுத்த சில நொடிகளில் புயலாய் வந்த பஸ் ஒன்று தன் பங்குக்கு மூன்று கற்களை பதம்பாற்து அதே வேகத்தில் மறைந்தது. இதில் சிதறிய ஒரு கல் மேல் குட்டி யானை(லோடு ஆட்டோ)ஒன்று லேசக மோதி இன்னும் கொஞ்சம் நடுரோட்டிற்கு தள்ளி விட டூ-வீலரில் வந்த ஒருவரின் காலில் காயம் ஏற்படுத்திய பிறகு, அந்த டூ-வீலர் ஆசாமி, மற்றும் சில நல்ல உள்ள்கங்களின் முயற்சசியால் கற்கள் எல்லாம் மீண்டும் பழைய நிலையான மூழ்கிய நிலையில் அதே இடத்தில் வைக்கப்பட்டன.
இதற்குள் பஸ் வந்துவிட, அதன் தொடர்ச்சியை பார்க்க முடிய வில்லை. ஆனால் பஸ்ஸின் ஜன்னல் வழி பார்த்தபோது முதல் பிள்ளையை போல் மீண்டும் ஒரு பிள்ளை வைப்பர்(மழை நீர் துடைப்பான்????) இல்லாமல் எதிர்திசையில் சென்றது.

0 comments: