மலர்வளையம்


இந்தியாவின் முதல் கூட்டணி மத்திய அரசை அமைத்து அதன் மூலம் இந்தியாவின் பத்தாவது பிரதமராக பணியாற்றிய,
மிஸ்டர்.கிளீன் எனப் புகழப்பட்ட திரு. விஸ்வனாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இன்று இயற்கை எய்தினார்..
அவரது ஆன்மா சாந்தியடைய பட்டணப்பிரவேசம் பிரார்திக்கிறது

கண்ணீர் அஞ்சலி

மும்பாய் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரிகள்,(கீழே படத்தில்...)

1. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் (சுமார் 80 என்கவுண்டர்கள் மூலம் மும்பையின் நிழலுலகை உலுக்கியவர்)
2.ஹேமந்த் கர்கரே (ஏ.டி.எஸ் தலைவர் - மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களை புலனாய்ந்தவர்)
3. ஏஸிபி அஷோக் காம்தே(இவர் தாத்தா மும்பாயின் முதல் ஐ.ஜி)
இவர்களுக்கும் மேலும் இந்த போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து மனிதருக்கும்(தீவிரவாத நாய்கள் இதல் அடங்கா!!) பட்டணப்பிரவேசத்தின் கண்ணீர் அஞ்சலி

டாக்டர் எத்தனை டாக்டரடி

ஹிதேந்திரன் - இந்த பெயரை தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தால் மூளை சாவை சாந்தித்த 16வயது ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களை அவனது பெற்றோர்(அசோகன், புஷ்பாஞ்சலி - இருவரும் மருத்துவர்கள்) தானம் செய்தனர். இதை தொடருந்து ஏற்பட்ட விழிப்புணர்வால் உடல் உறுப்புக்களை தானம் செய்வது பெருகிவருகிறது. இதற்கு அரசும் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முயற்சிகளை செய்துவருகிறது.
இதை நான் இங்கு குறிப்பிட காரணங்கள் சில.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருதை என்னும் தச்சு தொழிலாளியின் மனைவி சாந்தி என்பவர் மூளைச்சாவை சந்தித்தார், இதை தொடருந்து அவரது 14 வயது மகன் சுரேஷின் தூண்டுதலில் சாந்தியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன(அல்லது வழங்கப்படவுள்ளன). இதன் தொடர்ச்சியாக என் நினைவுக்கு வரும் இரு வேறு சம்பவங்கள்... சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜாராம்-கவிதா தம்பதியர் தமது 5வயது மகன் நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் எனக்கு மாற்று கருத்துகள் உண்டு. நவீனுக்கு முளை செயல்திறன் குறைவே அன்றி மூளைச்சாவு ஏற்படவில்லை. பொருளாதார பிரச்சனைகளுக்கு உறுப்பு தானம் தீர்வாகதே!!. இதை தவிர்த்து நவீனை அரசு அல்லது தனியார் காப்பகங்கள் வளர்க்கலாமே!!!
/// கின்னஸ்(??) திலீபன் பெற்றோருடன்///


/// நவீன் தாய் கவிதாவுடன்////


சம்பவம் இரண்டு...
சென்ற ஆண்டு ஜூன் மாதம் மணப்பாறையை சேர்ந்த டாக்டர் தம்பதி முருகேசன் காந்திமதியின் தவப்புதல்வன் திலீப் என்னும் 15வயது சிறுவன் கின்னஸ் சாதனைக்காக சிஸேரியன் ஆப்பரேஷன் செய்து சர்ச்சைக்குள்ளானது நினைவிறுக்கிறதா??. இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ, சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம். இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை(???) சமீபத்தில் தொடர ஆரம்பித்தனர். இதனால் எத்தனை உயிர்கள் ஊசலாட உள்ளதோ??

கவனிக்க: ஹிதேந்திரன், திலீபன் இருவரின் பெற்றோரும் மருத்துவர்களே!!!

கொசுறு:
இதை பதிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மற்றோரு மருத்துவர் 24 மணி நேரத்தில் 50 ஹிரண்யா ஆப்பரேஷன் செய்ய முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன்..
ஐயா உங்கள் சாதனை சோதனைகளுக்கான விலை மற்றவர் உயிர் அல்ல!!

நிழல் நாயகன்

திரையில் வில்லனாகவும் நிஜவாழ்வில் நாயகனாகவும் வாழ்ந்த திரு. எம். என். நம்பியார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்...
அவரது ஆன்மா சாந்தியடைய பட்டிணப்பிரவேசம் பிரார்த்திக்கிறது!!

என் தோழி... என் காதலி... என் மனைவி...

தமிழோவியம் இணைய இதழில் வெளிவந்ததாக வினையூக்கி வலைப்பதிவில் நான் படித்த இடுகை..
(பட்டணப்பிரவேசத்தின் முதல் காப்பி பேஸ்ட் :-))

அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில், ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன். அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம், நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை, தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி, திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை. நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம், காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான். . மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து "அப்பா, கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா" சொன்னது தான் தாமதம், வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து "ஏண்டி , கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தா,கீழேயா கொட்டுற, திமிருடி உனக்கு" என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது "அம்மு, ஏம்மா குழந்தையை அடிக்கிறே" நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி, மிரண்டு போய் இருந்தது. கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல, இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள். ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம், நேசம், எல்லாம் கிடைத்தது. கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும். ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள், ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள். என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்,ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் "இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல, உன்னையும் கூட்டிட்டுப்போகல, அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே!!" நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச, வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்."பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா?" எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை."தூங்கிட்டு இருக்கா""லஞ்ச் சாப்பிட்டாளா? திரும்ப அடிச்சியா?""சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன், அடிக்கல கார்த்தி" சிறிய மௌனத்திற்குப்பின் "சாரி கார்த்தி" என சொன்னபோது குரல் உடைந்திருந்தது. அழுதிருப்பாள் போலும். இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.அவள் "சாரி." சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்."கார்த்தி, காப்பி போலாமா?" எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது, அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்."பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார், பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்"மோகன் சிரித்தபடி "கார்த்தி, வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான், வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது, நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா, இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா?"மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை."நாம நிறைய சமயங்களில், கோபப்படுவதில்லை, சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம், இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா?""வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்""உன்னோட கோபத்திற்கு காரணம், கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட, ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்""ம்ம்ம்ம்""வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி, உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம், ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்."பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் "எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்""ம்ம்ம்ம் எடுத்துக்கோ"மோகனிடன் விடைபெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர். காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்."என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா." சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே "அப்பா, போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்"நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து, காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன். கண்ணாடியில் கீர்த்தனா "சாரி" சொன்னாள். கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்."கார்த்தி, ரம்யா வீடு வடபழனி தானே,,, நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிற""அம்மு, நாம இப்போ பீச் போறோமாம், பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டா"கண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன "தாங்க்ஸ் அண்ட் மீ டூ " என சொல்லிக் கண்ணடித்தாள், மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன்.

இது ஒரு நிலாக்காலம்

நிலாவில் தடம் பதித்த நம் இஸ்ரோ வல்லுனர்களுக்கு இந்த முறை மலர்க்கொத்து வழங்கப்படுகிறது.
பணத்தை செலவழிக்க வழிதெரியாமலும், கோட்டாக்களின் முறைகேடுகளாலும் சட்டக்கலூரிக்குள் மாணவர் என்ற பெயரில் நுழைந்து வெறித் தாண்டவம் ஆடிய நாட்டின் விஷக்கிருமிகளுக்கு இந்த முறை முள் கிரீடம்.

குழந்தைகள் தின வாழ்த்து!!

வலைப்பதிவு உலகின் கைக்குழந்தை (பதிய ஆரம்பித்து ஒரு மாதமே ஆகியிருப்பதால்) ஆகிய வாழவந்தான் உலகில் உள்ள அனைத்து குழந்தை உள்ளங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!!